தற்பொழுது உலக மக்கள் அனைவரிடத்திலும் மாபெரும் எதிர்பார்ப்பை கட்டி எழுப்பி உடனடியாக அங்கு சென்று வழிபட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது அயோத்தி ராமர் கோவில். ஏனென்றால் அயோத்தியில் ராமருக்கான கோவில் அமைக்கப்பட வேண்டும் என்பது 500 ஆண்டுகளில் தவமாகவும் வரலாற்று சாதனையாகவும் கருதப்படுகிறது. வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ராமராஜ்யம் என்று அழைக்கப்படுகின்ற சிறந்த ஆட்சிக்கு மன்னனாக ராமர் அரசராக முடிசூடபடுகிறார். அதோடு இந்த ராமாயணத்தில் கூறப்படும் கதைகள் அனைத்துமே கடமை நீதி மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் கருப்பொருளாக உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. இப்படி அயோத்தி ராமர் பிறந்து ராமரின் ஆட்சி நடைபெற்ற ஒரு இடம் என்பதால் இந்த நகரம் தர்மத்தின் சின்னமாகவும் சிறந்த ராஜ்ஜியத்தில் உருவாக்கமாகவும் கருதப்படுகிறது அதனால் இந்த பகுதியில் ராமருக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான ராம பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த கோரிக்கையை குறித்த பல நடவடிக்கைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டது, மேலும் பல போராட்டங்கள் மற்றும் வழக்கையும் சந்தித்து வந்த அயோத்தி ராமர் கோவில் ஒரு வழியாக தற்போது ஒரு முடிவை எட்டி அயோத்தியில் ராமருக்கு ஒரு மாபெரும் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதனை அடுத்து ராமர் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு திரும்பியிருக்கிறார் அவரை தரிசிக்க வேண்டும் அவரது முகத்தை பார்த்தால் போதும் நம் மனம் லேசாகிவிடும் என்றால் நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி புறப்பட்டு வருகின்றனர், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லட்சம் மக்கள் ராமரை காண வருவதாகவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமரைக் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒரு பெண் பேச்சாளர் மேடையில் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி உள்ளது. அதில், வால்மீகியின் ராமாயணத்தின் படி பல்வேறு ஆயிரக்கணக்கான பெண்களோடு அந்தப் புறத்தில் குடியும் கூத்துமாக இருந்தவர்தான் ராமன்! அவனையா உங்க பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக கூறப் போறீங்க? வாழ்வதற்கு வக்காமல் துணிச்சல் இல்லாமல் சரயு நதியில் தன் படை பலத்துடன் சொந்தங்களுடன் விழுந்து இறந்தவன் ராமன்? அவன் பிறந்தநாளைய உங்க பிள்ளை பிறக்கணும்னு ஆசைப்படுறீங்க என்று பலவாறு ராமரை குறித்து பேசினார். இப்படி பெண் பேச்சாளர் ராமரை குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிற நிலையில் இவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுமா என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் இந்த பெண் பேச்சாளர் கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் எனவும், திமுக மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் எனவும், குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அவர்களுடன் இருந்தார் எனவும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது, ஏற்கனவே சனாதன விவகாரத்தில் தேசிய அளவில் சிக்கிய உதயநிதி இந்தவிவகாரத்தில் மேலும் வசமாக சிக்குவார் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த விவகாரத்தை பாஜக சமூக வலைத்தள அணி தீவிரமாக கையில் எடுத்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை பாஜக சமூக வலைத்தள அணி தீவிரமாக கையில் எடுத்துள்ளது. வரும் நாட்களில் இது கண்டிப்பாக உதயநிதிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.