24 special

பொதுவெளியில் கதறி அழுத அஜர்பைஜானின் பிரதமர்! சோலியை முடித்து விட்ட மோடி! இனிமேல் பேசுவ!

PMMODI,ALIYEV
PMMODI,ALIYEV

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. 26 அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தானுக்கு வட்டியும் முதலுமாக இந்தியா பதிலடி கொடுத்தது. மூன்று நாட்கள் நீடித்த இந்த சண்டை பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு துருக்கி பெரிய அளவில் ஆயுதங்களை அளித்து ஆதரவாக இருந்தது. அதேபோல அஜர்பைஜானும் பாகிஸ்தான் பக்கமே நின்றது.


இதன் காரணமாக அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டது மேலும்  இந்த இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் சுற்றுப் பயணம் செய்யக்கூடாது எனவும், அந்நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்றும் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனால் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தான் இந்தியர்களுக்கு  சுற்றுலா தளங்களாக துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் மாறின. ஆனால் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவின் மூலம் இரு நாடுகளும் தங்களின் வருமானத்தை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலாவின் மூலம் மட்டும் 4000 கோடி ரூபாய் வருமானம் தந்திருக்கின்றனஎ. தற்போது அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த காரணத்தினால் தன்னுடைய சுற்றுலாத் துறை வருமானத்தை இழந்திருக்கிறது. 

இந்தநிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அஜெர்பைஜான், இந்தியா மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறது. அதாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு நேர உறுப்பினராக சேரும் தங்கள் நாட்டின் முயற்சியை இந்தியா, தடுத்துவிட்டதாக கூறி புலம்பி தள்ளியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் என மொத்தம் 9 நாடுகள் நிரந்தர உறுப்புநாடுகளாக உள்ளன. 

அஜர்பைஜான் அதிபர் அலியேவ் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அஜர்பைஜானுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா, சர்வதேச அமைப்புகளில் அஜர்பைஜானை பழிவாங்க முயற்சிக்கிறது. பாகிஸ்தானுடனான சகோதரத்துவ உறவு எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை பெறுகின்றன" என்று கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முழுநேர உறுப்புநாடாக சேரவிடாமல் தடுத்ததன் மூலம் பன்னாட்டு ராஜதந்திரக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாகவும் அஜர்பைஜான் ஊடகங்கள் அழுது புலம்பி வருகிறது. 

இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது  முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் அதிநவீன ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஆர்மேனியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.  ஆர்மேனியாவின் இந்த நடவடிக்கை, எதிரி நாடான அஜர்பைஜானுக்கு பயத்தை உண்டாக்கியது. 

ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜான்  எல்லை பிரச்சனையின்போது அஜர்பைஜான் இராணுவத்துடன் பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் களத்தில் நின்று செயல்பட்டன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஆர்மேனியா மற்றும் ஈரானுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தச் சூழலில், ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடான ஆர்மீனியா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

 இந்தியாவுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆண்டுதோறும் வலுவடைந்து வருகின்றன.  இதன் காரணமாகவே  அஜெர்பைஜான், இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளது.