தமிழக பாஜக இரண்டு வழிகளை வகுத்து செயல்பட்டு வருகிறது முதல் வழி பிளான் -A தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் செயல்பாடுகள், குறைகள், மக்கள் விரோத போக்கு என பாஜக கருதும் விவகாரங்களை கையில் எடுத்து அரசியல் செய்வது, அமைச்சர்களின் செயல்பாடு என பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து தமிழக மக்கள் மத்தியில் பாஜகவின் கொள்கைகளை கொண்டு சேர்ப்பது.
இரண்டாவது பிளான் -B .. தமிழகத்தில் பாஜக வளரவேண்டும் என்றால் மாவட்ட அளவில் சரியான நிர்வாகிகளை தேர்வு செய்வது மேலும் முறையாக செயல்படாத கட்சி நிர்வாகிகளை அடையாளம் காண்பது, அந்த வகையில் கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது முறையாக செயல்படாத 8 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டனர்.
இந்த சூழலில் கடந்த கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் CT ரவி வருகை தந்து இருந்தார் மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள், மாநில பொது செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்படும் மாநில நிர்வாகிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது, இளைஞர் அணி உட்பட பல நிர்வாகிகள் மாற்றம் புதிய நிர்வாகிகள் நியமனம் என ஆலோசனை நடத்தப்பட்டது, இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன அதன் அடிப்படையில் பாஜகவின் நிர்வாக மாவட்டத்தை சேர்ந்த 27 மாவட்டங்களில் மாவட்ட தலைவர்கள்,நிர்வாகிகள் போன்ற மாற்றம் இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கமலாலயத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் TNNEWS24-டம் தகவலை தெரிவித்தனர், மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றம் அரங்கேறும் எனவும், கட்சியை புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நிர்வாகிகள் மாற்றம் அமையும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.(தகவல் சேகரிப்பு - TNNEWS24 குழு )