பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது, இங்கு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் முன்பே நிதிஷ் குமாரை முதல்வராக அறிவித்த காரணத்தால் அவரையே முதல்வராக தேர்வு செய்தது இந்த சூழலில் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பாஜகவினரை கைது செய்துள்ளார்.
இந்த சூழலில் இது குறித்து இரண்டு தரப்பு இடையே சர்ச்சை தொடங்கியது, பாட்னா : பீஹாரை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமாருக்கும், சபாநாயகருக்கும் சட்டசபையிலேயே வாக்குவாதம் எழுந்த நிலையில், அந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவில் முதல்வர் கையொப்பமிட்டார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார்.பீஹாரின் லக்ஹிசராய் மாவட்டத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பா.ஜ., ஆதரவாளர்கள் இருவரை கடந்த மாதம் கைது செய்தார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கலாசார நிகழ்ச்சி நடத்தியதாக இவர்கள் மீது புகார் கூறப்பட்டது.
கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியை பணியிட மாற்றம் செய்யுமாறு பா.ஜ., தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதை முதல்வர் நிதிஷ் குமார் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் பீஹார் சட்டசபையில் சமீபத்தில் வெடித்தது. சபாநாயகருடன் முதல்வர் நிதிஷ் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் பணியிட மாற்ற உத்தரவில் முதல்வர் நிதிஷ் குமார் கையொப்பமிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல்வரை ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி நீடிக்க வேண்டும் என பிரதமர் மோடி, பீகார் மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதால் பாஜகவினர் நிதிஷ் குமார் அரசிற்கு ஆதரவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.