தமிழகத்தில் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்பு பல்வேறு அதிரடி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார், பாஜகவிற்கு ஆதரவு இருக்கும் மாவட்டம் ஆதரவு வளர்க்க வேண்டிய மாவட்டங்கள் என இரண்டாக பிரித்து அண்ணாமலை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மாவட்ட தலைவர்களை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் அண்ணாமலை குறிப்பாக முன்னாள் எம்எல்ஏவான சரவணன் பாஜகவில் இணைந்த சூழலில் அவருக்கு மாவட்ட தலைவர் பொறுப்பு கொடுத்தார், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த செந்தில் நாதனுக்கு கரூர் மாவட்ட. தலைவர் பொறுப்பு, சிவகங்கை மாவட்ட தலைவர் பொறுப்பு மேப்பல் சக்திக்கு என வலுவான தலைவர்களை மாவட்ட தலைமை பொறுப்பிற்கு கொண்டுவந்தார் அண்ணாமலை.
இந்த சூழலில் அண்ணாமலை நியமனம் செய்த மாவட்ட தலைவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் அதில் முன்னணியில் இருப்பவர் மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் இவர் பல்வேறு சமுதாய தலைவர்களை பாஜகவில் இணைக்கும் பணியை செய்து வருகிறார் மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் கட்சியை வளர்க்கும் பணியை செய்து வருகிறார்.
இந்த சூழலில் தான் மதுரையில் பல்வேறு தேவர் சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் விழா, சரவணன் தலைமையில் அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்றது இதில் ..கரு.ரஜினிகாந்த் அகமுடையார், .S.R.தேவர், செந்தூர்பாண்டியன், இறகுசேரி காசிராஜா உள்ளிட்ட பல்வேறு முக்குலத்தோர் நிர்வாகிகள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
விரைவில் இவர்கள் தங்கள் பகுதியில் பாஜகவை வலுப்படுத்தும் பணியில் இறங்கும் படி அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார், விரைவில் தென் மாவட்டங்களில் பாஜக மிக பெரிய வலுவடையும் என்று கூறப்படுகிறது, முறையாக செயல்படாத நிர்வாகிகளை அண்ணாமலை நீக்கி வருவதால் திறமை அடிப்படையில் செயல்படும் நிர்வாகிகளுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.தென் மாவட்டங்களில் இனிதான் பாஜகவின் கச்சேரி ஆரம்பம் என்கின்றனர் தென் மாவட்ட அரசியலை கணித்து வரும் அரசியல் நோக்கர்கள்.