சில தினங்களுக்கு முன்னர் இந்திய மோடி, ரஷ்ய அதிபர் புட்டீனுடன் கானொளி வாயிலாக ரஷ்ய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போது இந்திய பிரதமர் அறிவித்த அறிவிப்பு தமிழகதின் தலைநகரான சென்னையினை உலகளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
இந்தியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையே கடல் போக்குவரத்து மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் திட்டம் தொடங்க இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது இந்நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.ரஷ்யாவின் கிழக்கு துறைமுக நகரான விளாடிமிஸ்டிக் நகரிலிருந்து சென்னைக்கு கடல்வழி பாதை உறுதி இது இனி "சென்னை விளாடிமிஸ்டிக்" கடல் பாதை என அறிவிக்கப்படும் என்றார் மோடி.
சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு நகருக்கு சென்ற மோடி இந்த திட்டத்தை முன்னெடுத்தார் இப்பொழுது அது முறையாக அறிவிக்கப் படுகின்றது இதில் இந்தியாவுக்கு சாதகமான அம்சங்கள் பல உண்டு,முதலில் செழுமையான கச்சா எண்ணெய் இறக்குமதி, ரஷ்யா என்பது மிக பரந்த நாடு அந்த நாட்டின் மிகபெரிய வளம் கச்சா எண்ணெய்
அரபு நாடுகளை மிஞ்சும் அளவிற்கு மாபெரும் கச்சா எண்ணைய் புதையல் கொண்ட நாடு ரஷ்யா, இன்றளவும் ரஷ்யா உலகை மிரட்ட கச்சா எண்ணெய் இருப்பும் முக்கிய காரணம். ரஸ்யா சோவியத் யூனியனாக இருந்தபொழுது எண்ணெய் மிகபெரிய சொத்து அதனால்தான் ஹிட்லர் அந்நாட்டின் மீது படையெடுத்தார் பின்னாளில் சோவியத்தின் எண்ணெய் வியாபாரத்தை தடுக்கத்தான் அரபு நாடுகளில் அடிக்கொரு எண்ணெய் கிணற்றை தோண்டி எண்ணெய் விலையினை சரியவைத்து சோவியதுக்கு சிக்கலை செய்தது அமெரிக்கா என வரலாறு கூறுகிறது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியான சீனாவிற்கும் ஜப்பானுக்கும் அருகில் இருக்கும் விளாடிமிஸ்டிக்கில் இருந்து சீன கடல் வழியாக இனி இந்திய கப்பல்கள் சென்னைக்கு வரும் இதனால் மும்பை போன்ற மிக பெரிய வியாபார வாய்ப்பு சென்னைக்கு கிடைக்கும், இனி தமிழகத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் மிகபெரிய ஆலைகள் உருவாகலாம், இப்பொழுதே அதற்காக பல கம்பெனிகள் ரகசிய நில ஏற்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
எனவே இனி தமிழக கிழக்கு கடற்கரை மும்பையை ஒட்டி வேகமாக வளரும் இரண்டாவது கச்சா எண்ணெய்க்கு அரபு நாடுகளை நம்பும் பிடியில் இருந்து விலை குறைந்த ரஷ்ய எண்ணெய்க்கு இந்தியா மாறுகின்றது, இதன் மூலம் நமது நாட்டின் பெட்ரோல் டீசல் விலை குறையவும் வாய்ப்புகள் அதிகம்.மூன்றாவது சீன கடல் ஒட்டிய பகுதிகளில் இந்தியா போக்குவரத்து செய்வதால் சீனாவின் காலடியில் தன் பிடியினை இந்தியா இறுக்குகின்றது. சீனா ஒருவகை முற்றுகையில் சிக்குகின்றது இது இராணுவ ரீதியாகவும் இந்தியாவிற்கு முக்கியமான பாதையாக பார்க்கப்படுகிறது.
நான்காவது விஷயம் கொஞ்சம் மிகவும் முக்கியமானது அதாவது இந்தியாவால் தவிர்க்கமுடியா நாடு ரஷ்யா. இந்திய ராணுவம் முதல் அணுசக்தி வரை ரஷ்யாவின் வழங்கல்கள் அதிகம் ஆனால் இந்தியாவின் தலையில் ரஷ்யா எல்லாவற்றையும் கட்டுமே தவிர இந்தியா எதையும் அங்கிருந்து எடுக்கமுடியாதபடி தந்திராக ஆடுவார்கள் ரஷ்யர்கள் என்ற கூற்று பல நாட்களாக உள்ளது
இப்பொழுது மோடி ரஷ்ய எண்ணெயினை மிக அழகாக இங்கே கொண்டுவருகின்றார், அதாவது ரஷ்யாவினை இந்தியா பயன்படுத்துகின்றது என்பதுதான் உலக நாடுகள் கவனிக்க கூடிய விஷயம்கச்சா எண்ணெய், கடல் பாதுகாப்பு, ரஷ்யாவுக்கு ஒரு கயிறு என பலவழிகளில் கட்டபடும் இத்திட்டம் சென்னைக்கும் தமிழகத்துக்கும் நல்ல பொருளாதார வாய்ப்பினை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை, இதன் மூலம் சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகள் மிக பெரிய அளவு வளர்ச்சி அடையும் எனவும் கூறப்படுகிறது.
மும்பை மேற்கு அரபு நாடுகளின் கப்பல் போக்குவரத்தால் வளர்ந்தது போல, குஜராத் வளர்ந்தது போல சென்னை துறைமுகமும் தமிழக கிழக்கு கடற்கரையும் மிகபெரிய மாற்றத்தை விரைவில் காணும் என உறுதியாக கூறலாம்.
தமிழகத்துக்கு மோடி செய்திருக்கும் மிக பெரிய வளர்ச்சி திட்டம் இது, இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரகணக்கான தமிழர்கள் பயணடைவார்கள் எனவும், தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை என்பது மாறி வரும் ஆண்டுகளில் சென்னை என மாறினாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.