தமிழகத்தில் பாஜக வளரவில்லை மாறாக பாஜக தலைவர்கள் அதித வளர்ச்சி அடைந்து வருவதாகவும் இதற்கு காரணம் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் கொள்கையில் எதிர்கட்சியாக இருக்கும் திமுகவுடன் மறைமுக தொடர்பில் இருப்பதாகவும் கட்சியின் நகர்வுகளை எதிர்கட்சிகளிடம் தெரிவித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பத்திரிக்கை ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் மீது பாலியல் புகார்கள் வருவதாகவும் அதனை தொடர்ந்து , CT ரவி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் எனவும் , தவறான செயலில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்ததாக செய்தி வெளியிட்டது.
இந்த சூழலில் தான் பாஜக வின் மாநில பொதுச்செயலாளராக இருக்கும் KT ராகவன் அக்கட்சியை சேர்ந்த , சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடுத்தர பெண்ணிடம் தவறான முறையில் பேசிய வீடியோ காட்சிகளை பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டு செய்துள்ளது.
இந்த நிலையில் KT ராகவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கட்சியில் இருந்தோ அல்லது பொறுப்புகளில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது , டெல்லி தலைமையும் அதற்கான ஒப்புதல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
KT ராகவன் தவிர்த்து மேலும் 15 நபர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கபடலாம் ,எனவும் கட்சியை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முழுமையாக மாற்றி அமைக்க கட்சி மேலிடம் மாநில தலைமைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவை சேர்ந்த தற்போதய அமைச்சர் பெரியகருப்பன் மீதான ஆ பாச வீடியோக்கள் வெளியான நிலையில் திமுக தலைமை அதனை பெரிது படுத்தாமல் மவுனம் காத்தது அதே போன்று பாஜக மவுனம் காக்காது எனவும் விரைவில் நடவடிக்கையில் ஈடுபட்டு தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என அக்கட்சி நிருபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாதிக்கபட்ட பெண்ணின் கணவரும் பாஜகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் விரைவில் தொண்டனின் குரலுக்கு நீதி கிடைக்கும் என கூறப்படுகிறது.