சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர்கள் வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியினர். இவர்களுடைய 7 வயது மகன் தீக்ஷித் ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல் இன்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் சிறுவன் பள்ளிக்கு சென்றான்.
பள்ளி வேனை பூங்காவனம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும். வேனில் இருந்து திக்ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது மாணவன் திக்ஷித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஓட்டுநர் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். இதில் பின்னால் வகுப்பு அறைக்கு நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராத வகையில் வேன் மோதியது. மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, தனது ஒரே மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுதார், பள்ளிக்கு அனுப்பிய பிள்ளை இப்படி பிணமாக வந்துவிட்டானே என வேதனை தெரிவித்தார், இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒருபுறம் என்றால் மகனை பறி கொடுத்த தாய் அளித்த பேட்டி தமிழகத்தில் பல ஆண்டுகள் மறைக்கப்பட்ட செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நான் கிறிஸ்தவன்தான் என் மகனை புதைக்க இடம் கேட்டால், நீங்கள் CSI, நாங்கள் RC என்கிறார்கள், எனது மகனை இறுதி மரியாதை கூட செய்ய முடியாத என்னையா கிறிஸ்தவம், கிறிஸ்தவன்னு சொல்லவே வெட்கமா இருக்கு என வேதனையை வெளிப்படுத்தினார், அதாவது கிறிஸ்தவத்தில் சாதி பாகுபாடு இல்லை என்று கூறியே பலரை மதம் மாற்றி வந்த நிலையில் தற்போது இறந்த குழந்தையை புதைக்க கூட உள் பிரிவு பார்த்து இடம் அளிக்காதது தெரியவந்துள்ளது.
இப்படி மகனை பறிகொடுத்த தாய் வேதனையை மக்கள் மத்தியில் சொல்லி கொண்டு இருக்க பல உண்மைகள் தெரிந்துவிடுமோ? என்ற காரணத்தால் தாயின் பேட்டியை ஒளிபரப்பு செய்த ஊடகம் அவரது பேட்டியை பாதியில் நிறுத்தியது. மகனை இழந்த தாய் கொடுத்த பேட்டியை கீழே இணைக்கப்பட்டுள்ளது.