புதுதில்லி : நேற்று பிரிக்ஸ் நாடுகளான பிரேசில் ரஷ்யா சீனா ரஷ்யா ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தேசிய பாதுகாப்பு செயலாளர்களுடன் காணொளி வாயிலாக இந்திய ஜேம்ஸ்பாண்ட் அஜித் தோவல் கலந்துகொண்டு பேசினார். அதில் தீவிரவாதத்தை எதிர்த்து எந்த ஒரு ரிசர்வேசனும் இல்லாமல் போராடவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்திய ஜேம்ஸ் பாண்ட் கூறுகையில் "பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக பணிக்குழு ஒன்றை நியமித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வரவேற்கிறேன். தீவிரவாதிகளை வெவ்வேறு வழிகளில் எதிர்த்து போராடவேண்டும். தீவிரவாதிகள் மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கும் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
வதந்திகளை பரப்பவும் வெறுப்புச்செய்திகளை பரப்பவும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை பயன்படுத்தவிடாமல் உறுதிசெய்வதற்கு நமக்கு சைபர் பாதுகாப்பும் மிக அவசியம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை. அது நீண்டதூர பயணம். இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிகளையும் எதிர்க்கும் ஒரே நாடு சீனா மட்டுமே. சமபங்கு சீரிட்ஜிருத்தம் நம்பகத்தன்மை இல்லாமல் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மிக கடினம். கோவிட் உலகை தெளிவாக மாற்றியுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம் மற்றும் வேறுவிதமான தொற்றுநோய்களை எதிர்த்து போராட நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" என அஜித் தோவல் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் அஜித் தோவல் சீனாவை மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பற்றி பேசுகையில் சீன பாதுகாப்பு செயலாளரை பார்த்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பினராக எதிர்க்கும் நாடு சீனா மட்டும்தான் என கூறுகையில் ஆவேசமாகவும் அதேநேரத்தில் அழுத்தமாகவும் சீன பிரதிநிதியை பார்த்தது கூறியது குறிப்பிடத்தக்கது.