24 special

ஏட்டய்யாவிற்கு கோவம் வந்துருச்சு டோய்... "ரணகளமான" விவாதம் மோதி கொண்ட செந்தில் மனுஷ்!

Senthil manush
Senthil manush

திமுகவின் செய்தி தொடர்பாளர் மனுஷியா புத்திரன் தனியார் ஊடக நெறியாளர் செந்தில் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் கூற முடியாமல் பதிலுக்கு செந்திலை நோக்கி எங்களை கேள்வி கேட்கும் நீங்கள் ஏன் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள் என பாய பதிலுக்கு செந்தில் ஆளும் அரசானா திமுக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என கேட்கிறீர்கள் என்ன நியாயம் என பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.


நாளுக்கு நாள் தமிழக அரசியலில் பாஜகவின் செயல்பாடு தீவிரம் அடைந்து வருகிறது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் அமைச்சர்கள் ஒருவர் மாறி ஒருவராக பொது வெளியில் அமைதி காத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் சமீபத்தில் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடு குறித்து அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் அதில் அண்ணாமலை வைத்த குற்றசாட்டு அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன, இதனை மையமாக வைத்து தனியார் ஊடகம் ஒன்றில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி, அண்ணாமலை எழுப்பிய மூன்று கேள்விகளுக்கு ஏன் ஆளும் அரசிடம் இருந்து பதில் வரவில்லை என கேள்வி எழுப்பினார் இது ஒருபுறம் என்றால் விவாததத்தை தொகுத்து வழங்கிய நெறியாளர் செந்தில் பதிலுக்கு ரபேல் என பேச விவாதம் மனுஷ்ய புத்திரனை நோக்கி சென்றது.

ஏன் நீங்கள் அண்ணாமலை சொல்வது தவறு என்றால் இன்று வரை அவர் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார் செந்தில் இதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத மனுஸ்ய புத்திரன் அண்ணாமலையை முன்னிருத்துவதே ஊடகம் தான், எங்களிடம் கேள்வி கேட்கும் நீங்கள் ஏன் அண்ணாமலையிடம் கேள்வி கேட்பது இல்லை என பதில் கேள்வி எழுப்பினார்.

ஒரு கட்டத்தில் இருவரும் கார சாரமாக மோத ஒரு கட்டத்தில் ஆளும் அரசு அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நாங்கள் கேள்வி எழுப்பினால், ஏன் நீங்கள் அண்ணாமலையை நோக்கி கேள்வி எழுப்பவில்லை என எங்கள் பக்கம் கேள்வி கேட்பது என்ன நியாயம் என செந்தில் மனுஷ்ய புத்திரனை நோக்கி பாய்ந்தார்.

இதை பகிர்ந்த பலர் சரி சரி அடிச்சுக்காதீங்க ஏட்டய்யா என கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர், தீவிர திமுக ஆதரவாளர் என அறியப்பட்ட செந்தில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யாத காரணத்தால் கடுமையாக ஆளும் அரசை நோக்கி கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது. விவாதம் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.