24 special

போராட்டத்தை தூண்டுகிறதா எதிர்க்கட்சிகள்..? அக்னிபாத் திட்டத்தின் முழுப்பின்னணி..!

Rajnath singh
Rajnath singh

புதுதில்லி : ராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திரிவேதி கூறுகையில் " அக்னிபாத் திட்டம் என்பது தேசத்தின் மாற்றத்திற்கான முக்கியமான சீர்திருத்தமாகும். இந்திய ராணுவத்தின் மனிதவள நிர்வாகத்தில் முன்னுதாரணமான மாற்றங்களை உள்நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த புதிய ஆள்சேர்ப்பு திட்டம் குறித்து அவர் விவரிக்கையில் " தேசபற்றுடன் தாய்நாட்டை நேசிக்கும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் நான்காண்டுகளுக்கு ஆயுதப்படையில் பணியாற்ற ஒரு மிகசிறந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. இதில் சேரும் இளைஞர்கள் அக்னிவீரர்களாக இந்திய ஆயுதப்படைகளில் பணிபுரிவார்கள்.

நான்காண்டு காலம் முடிந்தவுடன் பெருநிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ஆயுதப்படைகள் பாதுகாப்பு தொழில்துறை உள்ளிட்ட எந்த துறையிலும் தங்களுக்கு விருப்பப்பட்ட துறையில் அக்னிவீரர்கள் பணியில் சேர முன்னுரிமை வழங்கப்படும். எதிர்காலத்தில் மோதல் சூழ்நிலை உருவானால் நன்கு பயிற்சிபெற்ற தொழிநுட்பரீதியில் திறமையானவர்களை தேர்ந்தெடுக்க இந்த அக்னிபாத் திட்டம் கைகொடுக்கும் " என கூறினார்.

பொதுவாக வயதானவர்கள் மலைப்பிரதேசத்தில் ஏற சிரமப்படுவார்கள். உயரம் ஒரு பிரச்சினையாக வீரர்களுக்கு இருக்கிறது. இளைஞர்களை தேர்ந்தெடுக்கும்போது அது இலகுவாகிவிடும். ராணுவத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டுவர இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருப்பதை இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஓய்வூதியம் மற்றும் பலூனிங் சம்பளங்களை குறைப்பதுடன் ஆயுதப்படைகளை பொலிவேற்ற குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த செவ்வாயன்று மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டமானாலும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன் போராட்ட்டத்தின் மூலம் வன்முறையை தூண்டி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயல்வதாக பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். மேலும் இந்திய ஆயுதப்படைகளின் உயரதிகாரிகள் கடந்த இரண்டுவருடமாக இந்த திட்டத்தை குறித்து ஆலோசனை செய்த பிறகு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகே மத்திய அரசு ஒப்புதல் வழங்கி திட்டத்தை அமுல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.