
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு மிகப்பெரியளவில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. பிரதமர் மாளிகையும் கூட சூறையாடப்பட்டது. இதையடுத்து அவர் வேறு வழியின்றி பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு வந்தார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக பல அந்நிய நாட்டு சக்திகளுடன் இணைந்து அங்கு போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவை எல்லாம் இப்போது தான் ஒரு மாதிரி செட்டிலாகி வருகிறது. இதற்கிடையே அங்கு மீண்டும் ஒரு குழப்பம் வெடிக்கும் வெடித்துள்ளது
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைந்தது.இது முழுக்க முழுக்க இஸ்லாமிய மதத்தின் நடக்கும் ஆட்சி போல் நடந்து வந்தது. வங்கதேசத்தில் உள்ள ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டன இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதராவாகவும் அங்கு ஆட்சி அமைந்தது. இந்தியாவீண் ராணுவ வீரர்கள் இரத்தம் சிந்தி வங்கதேசத்திற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் ஆனால் மதமே முக்கியம் என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் கூட்டு சேர தொடங்கியுள்ளது வங்கதேசம். இந்த நிலையில் அங்கு இடைக்கால அரசு அமைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது. முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலையை எட்ட முடியாததால் ஆட்சி நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் இதனால் அவர் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் இந்தியா வங்கதேசத்தின் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா பல பொருளாதார அடிப்படையில் வங்கதேசத்தை சிக்கவைத்துள்ளது இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறி வருகிறது. இந்தியாவை பகைத்ததால் பல்வேறு அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். இப்படியே விட்டால் வங்கதேசம் பிச்சை தான் எடுக்கும் என கூறியுள்ளார்கள்.
இது தொடர்பாகத் தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், "யூனுஸ் ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதனால் அது குறித்து ஆலோசிக்க அவரை சந்தித்தோம். அவரிடம் கேட்டால் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறுகிறார். நிலைமை மோசமாக இருப்பதாக அவர்உணர்ந்துள்ளார் . குழப்பம்நாடு தற்போதிருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலையை எட்ட முடியாவிட்டால் பணிபுரிய முடியாது என கூறியுள்ளார் "யூனுஸ்
அதேநேரம் தனது பணியைச் செய்ய முடியாவிட்டால் யூனுஸ் ஆட்சியில் இருந்தும் எந்தவொரு பயனும் இருக்காது. அவர் மீது நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் அரசியல் கட்சிகளால் வைக்க முடியவில்லை என்றால் அவர் ஏன் இந்த பதவியில் இருக்க வேண்டும்" என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த இரண்டு நாட்களாகவே யூனுஸின் இடைக்கால அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ராணுவத்திற்கும் யூனுஸ் ஆட்சிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன தான் அரசியல் கட்சிகள் என இஸ்லாம் கூறினாலும், அங்கு ராணுவத்திற்கும் யூனுஸுக்கும் இடையே தான் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு மாணவர் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்த போது ராணுவத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அப்போது போராடும் மாணவர்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்களும் அழுத்தமும் அதிகரித்தது. இருப்பினும், ராணுவம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் மவுனமாகவே இருந்தது.
ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற ராணுவம் உதவிய போதிலும், மாணவர் போராட்டத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. அதன் பிறகும் கூட ராணுவம் ஆட்சியை அமைக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவில்லை. யூனுஸ் இடைக்கால ஆட்சியை அமைக்க உதவியது. ஆனால், இப்போது இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டால் அது வங்கதேச எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவே இருக்கும்.