
பாகிஸ்தான் நாடு பிரிந்ததிலிருந்தே இந்தியா மீது பயங்கரவாதிகள் மூலம் மறைமுகத் தாக்குதலை தொடுத்து வருகிறது. குறிப்பாக அந்த இந்தியாவில் இருந்து பல தேசத்துரோகிகள் அவர்களுக்கு உளவு பார்த்து வருகிறார்கள், இந்தியாவில்இருந்து சம்பாதித்து அதில் வாழ்ந்து வரும் சிலமத அடிப்படைவாதிகள் இன்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். மேலும் அந்நாட்டிற்கு ஆதரவாக சீனா பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உலகில் மிகப்பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கின்றன.
இதற்கிடையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடுத்த வாரம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திற்கு பயணம் செய்ய உள்ளார். இது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. மேலும் இந்த பயணத்தின் போது, இந்தியா வாங்கியுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்களை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கும் சுகோய் மேம்படுத்தப்பட்ட விமானங்கள் குறித்தும் S-500 அமை குறித்தும் அஜித் தோவல் பேசவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய S-400 S-500 குறித்தும் ப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீர் பகுதியில் இந்தியா தனது முப்படைகள் மூலம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதற்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அத்துமீறிய நிலையில் இந்தியா அவற்றை தாக்கி அழித்து பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறலின் போது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமல்லாது, ரஷ்யாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு மிக்க உறுதுணையாக இருந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையேயான ஒப்பந்தத்தின் போது இந்த பாதுகாப்பு அமைப்பு வாங்கப்பட்ட நிலையில் போரில் அதன் பலன் பெரிய அளவில் இருந்தது.இந்த நிலையில் தான் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித். சீனியர் பாதுகாப்பு பிரதிநிதிகள் சந்திப்பு - 13வது சர்வதேச மாநாடு என்ற பெயரில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கவே இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போதே, இந்தியா ரஷ்யா இடையே உள்ள முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் தொடர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவிருக்கின்றன. அதுவும் முக்கியமாக, இந்தியா வாங்கியுள்ள S-400 ஏர் டிஃபென்ஸ் அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்களை விரைவில்கொண்டு வருவது குறித்தும் அஜித் தோவல் இந்த சந்திப்பில் பேசவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பில், ரஷ்ய பாதுகாப்பு செயலாளர் செர்கேய் ஷோய்கூ தலைமையிலான மாநாட்டில் அஜித் தோவல் பங்கேற்கவுள்ளதோடு, தனிப்பட்ட இரு தரப்புக் சந்திப்புகளும் நடைபெற உள்ளன. இதற்கிடையே, புதிய S-400 ஒப்பந்தங்கள் குறித்தும் இருநாடுகளும் ஆலோசிக்கவுள்ளன. இந்த பயணத்திற்கு முன்னதாக, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் மாஸ்கோ சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பிறகு நடக்கும் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சிந்தூர் ஆபரேஷனில் பிரமோஸ் ஏவுகணை (இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சி), S-400 உள்ளிட்ட பல ரஷ்யா உருவாக்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவும் இந்தியாவும் கொண்டுள்ள இணைப்பு மேலும் வலுப்பெற்றது. அஜித் தோவலின் ரஷ்ய பயணம் தற்போது உ லக நாடுகள் உற்றுநோக்கி வருகிறார்கள்.