24 special

உஷார் மக்களே! நூலிழையில் தப்பிய பாலிவுட் நடிகை!

vidua balan,internet
vidua balan,internet

ஒவ்வொருவரும் தாங்கள் அன்றாடம் செய்யக்கூடிய பல வேலைகளில் இன்று இணையம் பெரும் பங்கு வகித்து வருகிறது. காலையில் அலாரத்தோடு நம்மை எழுப்பி இன்று நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் நினைவிற்கு கொண்டுவந்து செய்தித்தாள்கள் வெளியில் செல்வதற்கு ஆட்டோ புக்கிங் சமைப்பதற்கு கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து அதற்கான பேமென்ட் தற்போது இணைய மூலமாக செய்து வருகிறோம். வங்கிக்கு செல்லாமல் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறோம். இப்படி இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதும் அதற்கு ஏற்ற வகையில் இணையம் தொடர்பான மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மென்பொருள் மூலம் இணையம் வழியாகவே நமது பல விவரங்களை திருடுகின்றனர். அப்படி திருடப்பட்ட தரவுகளை வைத்து பல மோசடி கும்பல் அந்த மொபைல் போன் பயணங்களை மிரட்டி பணம் வசூலிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சில மோசடி மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டு அதிலும் பல மோசடி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 


அதாவது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் மெசேஜில் ஒரு லிங்க்கும் உள்ளது அந்த லிங்கை தெரிந்தோ தெரியாமலோ கிளிக் செய்தவுடன் நமது வங்கி மற்றும் சில முக்கிய தகவல்கள் அனைத்தும் அந்த மோசடி கும்பலுக்கு சென்று அவர்கள் அதனை பயன்படுத்தி அந்த மொபைல் போன் பயனாளியின் வங்கி கணக்கிலிருந்து இணைய மூலமாகவே பணத்தை திருடி வருகின்றனர். இதனை அடுத்து ஸ்டாக் மார்க்கெட் போன்ற பெரிய வணிகச் சந்தைகளிலும் இவர்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். அதோடு பகுதி நேர வேலை என்ற பெயரில் பல சைபர் கிரைம் மோசடிகள் நடந்து வந்தது. இப்பொழுது உங்கள் மொபைல் போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தால் கூட அதில் ஏதாவது ஒரு நண்பர் பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதிப்பது தொடர்பான ஸ்டேட்டஸை வைத்திருப்பார் அதை குறித்து நீங்கள் அவரிடம் விசாரிக்கும் பொழுதும் தினசரி 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் பெருமிதமாக கூறுவார் ஆனால் இதற்கு பின்னாலும் மிகப்பெரிய சைபர் க்ரைம் குற்றம் நடப்பதாக சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இது மட்டும் இன்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட உங்களது பெயரில் கொரியர் வந்திருப்பதாகவும் வெளிநாட்டிலிருந்து பரிசுகள் வந்திருப்பதாகவும் கூறி வங்கியில் இருந்து ஈமெயில் மூலம் கேஒய்சியைப் பூர்த்தி செய்யும்படியான லிங்கை அனுப்பி பல மோசடி சம்பவங்கள் நடைபெற்றது இதில் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்,  நம் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ள நண்பர்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் இணையதளங்களை கண்டறிந்து அவர்களிடம் நம்மைப் போன்றே ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி, பேஸ்புக் ஐடி, மின்னஞ்சல் என அனைத்தையும் தொடங்கி அதன் மூலமாக நாம் தெரிந்தவர்களுக்கு உதவி கேட்பது போன்ற செய்தியை அனுப்பி பணத்தை வசூலிக்கின்றனர். 

இந்த மோசடியில் தற்பொழுது பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் சிக்கும் நிலைமைக்கு சென்றுள்ளார். அதாவது பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், இமெயில் கணக்குகள் தொடங்கப்பட்டு வித்யா பாலனுக்கு தெரிந்தவர்களிடம் சில மர்ம நபர்கள் நான் வித்யா பாலன் உங்களை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் அதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறது என்று கூறி அவர்களிடம் பணம் கேட்டு வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர். தன் பெயரில் இப்படி ஒரு மோசடி நடந்து கொண்டிருப்பதை தன் டிசைனர் மூலம் தெரிந்து கொண்ட வித்யா பாலன் உடனடியாக மும்பை கார் ரோடு போலீசில் புகார் அளித்தார். அதில் இன்ஸ்டாகிராம் மூலம் எனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசி சிலரிடம் பணம் கேட்டுள்ளனர் இதனை என் டிசைனர் தான் தன்னிடம் கூறி உஷார் படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பாலிவுட் நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.