
உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது அயோத்தியில் ராமருக்கான கோவில் கட்டப்பட வேண்டும் என்பது, அந்த எதிர்பார்ப்புகள் அனைத்துமே கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பூர்த்தி செய்யப்பட்டது. இரு மதங்களுக்கிடையிலான பெரும் பிரச்சனைகளாகவும் போராட்டங்களாகவும் சர்ச்சைக்குரிய இடமாகவும் இருந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அங்கு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் முடிக்கப்பட்டு தற்போது லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வருகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு கூட இதற்கான சர்ச்சை ஆங்காங்கே வெடித்துள்ளது இருப்பினும் சுதந்திரத்திற்கு பிறகு இதற்கான போராட்டங்கள் வலுவெடுக்க ஆரம்பித்து மத கலவரத்தில் முடிந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரும் இதற்கு பலியானது இதனை அடுத்து இரண்டு தரப்பினர் மத்தியிலும் தொடரப்பட்ட வழக்கும் பல ஆண்டுகளாக நீடித்தே வந்தது அதில் தற்போது நல்ல முடிவு கிடைத்துள்ளதாகவே பல நிபுணர்கள் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்பு கோவில் இருந்த இடம் என்பதையும் அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளது என்பதையும் ஆய்வு செய்த முக்கிய அகழ்வாராய்ச்சியாளராக இருந்த ஒருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இதனை அடுத்து சர்ச்சைக்குரிய இடம் பாபர் மசூதிக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் கூட அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கட்டப்பட்டு கொண்டிருக்கிற சமயத்தில் பிரதமர் அயோத்திக்கு செல்லும் பொழுது மலர் தூவி அவர்கள் வரவேற்றனர்.
தற்போது நாகர் பாரம்பரிய முறையில் மூன்று மாடிகளைக் கொண்டதாக 380 அடி நீளத்திலும் 250 ஆடி அகலத்திலும் 161 அடி உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது அயோத்தி ராமர் கோவில். இந்த கோவிலின் பிரதான கருவறையில் ராமர் சிலையும் முதல் தளத்தில் ஸ்ரீ ராமர் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கோவிலின் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை செயற்கையான பாறைகளை பயன்படுத்தப்பட்டுள்ளதால் எந்த ஒரு இயற்கை சீற்றத்தாலும் அசைக்க முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி பிரம்மாண்டமாக அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேக விழாவும் பல ரிஷிகள், தலைவர்கள் பண்டிதர்கள் நட்சத்திரங்கள் மத்தியில் நடைபெற்றது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இதனையே தற்போது பல கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதை வேறு விதமாக வெளிக்காட்டி வருகின்றனர். அதாவது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துமே வேண்டுமென்றே அயோத்தி ராமர் கோவிலை சிறுபான்மையினருக்கு எதிராக திருப்பி பிரச்சனையை வெடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது கிறிஸ்தவ பாதிரியார் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. அதில், இன்று உலகமெங்கிலும் ஒரு பெயர் இருக்கிறது என்றால் அது இயேசுவின் நாமம்! இயேசு கிறிஸ்து பாடுபட்டு உயிரிழந்த பிறகு அதனோடு வரலாறு முடியவில்லை அதற்கு பிறகு தான் வரலாறு ஆரம்பிக்கிறது... வரலாற்றில் இல்லாத கட்டுக் கதைகளுடன் வருபவர்கள் வரலாறு புனைந்து அவர்களுக்கு பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் கட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று சொல்லி அந்த இடத்தில் இருக்கின்ற மற்ற வழிபாட்டு தலங்களை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு எத்தனை வருடங்களாக போராடி அவர் இங்கே தான் பிறந்தார் என்று சொல்லி பிறக்காத ஒருவரை கூட வரலாற்றில் இல்லாதவர்களுக்கு கோவில் கட்டுகிறார்கள் அப்பேர்ப்பட்ட காலகட்டத்திலே எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் அதை தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று எஸ்றா சற்குணம் மறைமுகமாக ராமர் கோவிலை தாக்குவது போன்று பேசியுள்ளார்.
இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது இருப்பினும் தற்போது இணையத்தில் உலா வருகின்ற இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய வீடியோவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை, எனினும் இது விரைவில் விஸ்வரூபமாக வெடிக்கும் என தெரிகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.