புதுதில்லி : ராயல் ஆஸ்திரேலியா போர்விமானங்களுக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பயிற்சியே பிச் பிளாக். ஆஸ்திரேலியா நடத்தும் இந்த பயிற்சியில் உலகெங்குமிருந்து 15 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் இந்த வருடம் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை SU-30MKIரக போர்விமானங்களை அனுப்புகிறது. ஜெர்மனியில் இருந்து டைபூன் விமானமும் பிரான்சிலிருந்து ரபேலும் ஜப்பானில் இருந்து F-2 போர்விமானமும் சிங்கப்பூரில் இருந்து F15SG மற்றும் F-16, இந்தோனேஷியாவிலிருந்து F-16A USAFவிலிருந்து F-15C ஆகிய போர்விமானங்கள் பங்கேற்கின்றன.
இந்தியா கடைசியாக 145 விமான வீரர்கள் மற்றும் SU-30MKI, C-130, C-17 ஆகிய விமானங்கள் பயிற்சியில் கலந்துகொண்டன. இந்த பிட்ச் பிளாக் பயிற்சி என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் உருவகப்படுத்தப்பட்ட விமானப்பயிற்சிகளை மேற்கொள்ளுவது மற்றும் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தும் ஒரு பயிற்சியாகும்.
இதுமட்டுமன்றி போர் வியூகம் மற்றும் செயல்பாட்டு திறனை இந்த பயிற்சியின்போது பரஸ்பரம் ஒவ்வொருநாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன. இந்த பயிற்சியில் இதுவரை இந்தியாவுடன் சேர்ந்து 15 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. நமது SU-30MKI போர்விமானம் இரண்டாவது முறையாக இந்த பயிற்சியில் கலந்துகொள்கிறது.
முந்தைய SU-30MKI விமானங்களை விட தற்போது SU-30MKI விமானத்தில் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயிற்சிக்கு 15 விமானங்கள் அனுப்பப்படலாம் என தெரிகிறது. அத்துடன் விமானப்படை வீரர்கள் 175 பேர் செல்லலாம் என கருதப்படுகிறது.