24 special

உலக நாடுகளே தவித்த போது.. இந்தியா சாதித்தது எப்படி 46 ஆயிரம் டன் எரிவாயுடன் கரையைத் தொட்ட ஷிவாலிக்

PMMODI,JAISHANKAR
PMMODI,JAISHANKAR

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஏவுகணைகள் வான்வெளியை அதிரச் செய்த அந்தப் பதற்றமான சூழலில், இந்திய இளம் பொறியாளர் அன்ஷ் திரிபாதியின் துணிச்சலான செயல் தேசத்தையே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதலால், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு,. இத்தகைய இக்கட்டான சூழலில், கத்தாரிலிருந்து 46,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்த இந்தியக் கப்பல் வழியெங்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு நின்றது.


இந்த நெருக்கடியான நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையின் கீழ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மேற்கொண்ட துரிதமான ராஜதந்திர நடவடிக்கைகள் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையேயான தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இது சர்வதேச அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும், ஜெய்சங்கரின் ராஜதந்திர அணுகுமுறையுமே அந்த ஆபத்தான பாதையில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வழிவகுத்தன.

மார்ச் 12 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா நோக்கிய பயணத்தைத் தொடங்கிய 'ஷிவாலிக்' கப்பலை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் அன்ஷ் திரிபாதி மிகுந்த மன உறுதியுடன் இயக்கினார். வான்வெளியில் ஏவுகணைகள் சீறும் சத்தமும், தகவல் தொடர்பு துண்டிப்பும் நிலவிய அந்த நள்ளிரவில், ஒரு ஏவுகணை கப்பலுக்கு மிக அருகிலேயே கடந்து சென்றது. அந்த மரண பயத்திலும் தளராமல், தனது தாய்நாட்டிற்கு எரிவாயுவை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அன்ஷ் செயல்பட்டார். இறுதியாக மார்ச் 13 அன்று 26 ஊழியர்களுடன் அந்தக் கப்பல் குஜராத்தின் முந்திரா துறைமுகத்தைப் பாதுகாப்பாக வந்தடைந்தது.

தேசத்தின் ஒரு குடிமகனுக்கும் சிறு கீறல் கூட விழக் கூடாது என்பதில் பிரதமர் மோடி காட்டிய அக்கறையும், அதனைச் செயல்படுத்த ஜெய்சங்கர் மேற்கொண்ட உலகளாவிய தொடர்புகளும் அன்ஷ் திரிபாதி போன்ற வீரமிக்க அதிகாரிகளுக்குப் பெரும் பலமாக அமைந்தன. தனது மகன் பத்திரமாகத் திரும்பியதற்கு அன்ஷின் தந்தை மத்திய அரசுக்கும் அதன் ராஜதந்திரத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, தேசத்தின் நலனுக்காக உழைக்கும் தலைமையும், அன்ஷ் போன்ற தேசப்பற்றுமிக்க அதிகாரிகளும் இணைந்திருப்பதே இந்தியாவின் உண்மையான வலிமையாகும்