24 special

ஆளுநர் தமிழிசை செய்த காரியத்தால்..!உயிர் பிழைத்த இரண்டு குழந்தைகள்...!

Mk stalin,tamilisai
Mk stalin,tamilisai

ஊழல் செய்த அமைச்சரை காவேரி மருத்துவமனையில் ஷிப்ட் போட்டு பார்த்துவரும் தமிழக அரசியலில் ஏழை மாணவர்களை விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றி தனிக்கவனம் பெற்றுள்ளார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!


கடந்த 20ம் தேதி புதுச்சேரி புஸ்ஸி வீதியில் காலை வேளையில் தனியார் பள்ளிக் குழந்தைகளை எற்றிச் சென்ற ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்ட கொடூர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து காப்பாற்றி ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர், காயமடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகவல் புதுச்சேரியில் தீயாக பரவியது, இந்த செய்தியறிந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 'நம்பிக்கையோடு இருக்க வேண்டும்' என ஆறுதல் கூறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது' என மருத்துவர்கள் கூற உடனே சில பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறினர்.

உடனே தமிழிசை அவர்கள் தலையிட்டு அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அந்த அரசு மருத்துவமனையிலேயே தரமான மருத்துவ சிகிச்கைக்கான வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுத்தார். அவர் மருத்துவர் என்பதால் அவரின் அறிவுரைப்படி அரசு மருத்துவர்களும் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு தயாராகினர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் ஆளுநர் தமிழிசை கூறியபடியே நல்லபடியாக பிழைத்தனர். 

அதற்க்கு அந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் ஆளுநர் தமிழிசையின் காலில் விழாத குறையாக கண்ணீர் வடித்து நன்றி கூறினார். இந்த தகவல் புதுச்சேரி முழுவதும் பரவி ஆளுநரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.தழகத்தில் ஊழல் புகாரில் சிக்கி கைதுக்கு பயந்து மருத்துவமனையில் படுத்திருக்கும் அமைச்சரை காப்பாற்ற ஷிப்ட் போட்டு திமுக அரசின் அமைச்சரவையை காத்திருக்க இரண்டு எளிய குழந்தைகளை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய ஆளுநர் தமிழிசை பாராட்டப்பட வேண்டியவர்தான் என சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.