24 special

முதல்வர் ஸ்டாலின் மருமகனால் திமுகவிற்கு வர போகும் புது பிரச்சனை...!

Mk stalin,sabarisen
Mk stalin,sabarisen

திமுக அமைச்சரவை தொடர் ரெய்டு, மக்கள் மத்தியில் அவப்பெயர் என தள்ளாடிக்கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் குடும்பத்தின் முக்கியப் புள்ளி செய்யப்போகும் பெரிய காரியத்தால் அரசியல் பிரளயமே வெடிக்கப்போவதாக பரபர தகவல் கசிந்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் சாராத குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் சபரீசன், இவருக்கும் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. ஸ்டாலினின் மகள் அரசியலில் அதிகம் தலையிடாமல் இருந்தாலும் சபரீசன் தான் திமுக ஆட்சியின் மொத்த பின்புலமே என்று கூறும் அளவிற்கு தற்போது திமுகவின் அனைத்து விவகாரங்கள் மற்றும் முடிவெடுத்தல்களிலும் சபரீசன் இருப்பதாக கூறப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலை காரணமாக அவர் அரசியலை விட்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்ததும் அந்த இடத்திற்கு மு க ஸ்டாலின் வர ஆரம்பித்தார், அந்த சமயத்தில் கட்சி விஷயங்களை பேசவும் அதற்கான முடிவுகளை எடுக்கவும் சிறந்த உத்திகளை கையாள சபரீசன் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. திமுக சந்தித்த முக்கிய பிரச்சனைகளில் சபரீசன் ஆலோசனை வழங்கும் நபராக இருந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பொழுது ஸ்டாலின் தான் வராரு என்ற பாடல் இவரது ஆலோசனையின் மூலமே உருவாக்கப்பட்டதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது மட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சபரீசன் சிக்கி வருகிறார். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளது எனவும், முதல்வர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ளும் பொழுது இவரும் உடன் சென்றுவிடுகிறார் எனவும் பல புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. இது மட்டுமல்லாமல் கடந்த மாதம் வருமானவரி துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்ற போது சபரீசனுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்த ஆடியோவிலும் முப்பதாயிரம் கோடி அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்த ஆடியோ பதிவு வேறு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சபரீசன் மது ஆலையை தொடங்க உள்ளதாக பகிர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

திமுக அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் வாகன ஒப்பந்ததாரரான பொன்மணி பாஸ்கர், சபரீசன் மது ஆணை தொடங்க உள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். மேலும் மதுபான பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளிகளுக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு அவர்கள் அதனை கூலியாக பெற்று வந்தனர். தற்போது அதிலும் ஊழல் நடத்தும் வகையில் ஆறு ரூபாய் செந்தில் பாலாஜிக்கு செல்கிறது கூலி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து இவ்வளவு ஊழல் செய்ய வேண்டுமா! டாஸ்மாக்கின் மூலம் பெறப்படும் 40 ஆயிரம் கோடி வருவாய் பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உதவுகிறது.  செந்தில் பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டவுடன் டாஸ்மார்க்கில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் என்னை போன்ற டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர்களும் மகிழ்ச்சி அடைந்தோம். 

கரூர் கம்பெனியும் ஒரு வழியாக ஒழிந்து விட்டது என்று நம்பி வந்தோம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு டாஸ்மார்க் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அங்கிருந்த அதிகாரி இனி எந்த சாமியையும் கும்பிடாதீர்கள், கும்மிடிப்பூண்டியில் சபரீசனும் 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த சக்சேனாவும் இணைந்து புதிய மதுபான ஆலையை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளனர். இனிமேல் யாருக்கும் ஆர்டர் கிடைக்காது, 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று விவகாரத்திலும் கரூர் கம்பெனி சில மதுபான கடைகளை மிரட்டி மூன்று நாட்களில் 30 கோடி அளவிற்கு வசூலித்து மோசடி செய்துள்ளனர் என்று திமுக அரசியலே ஆட்டம் காணும் அளவிற்கு ஒரு அதிரடி தகவல் ஒன்றை தெரிவித்தார். 

செந்தில் பாலாஜி சென்று விட்டார் இனி டாஸ்மாக் நிர்வாகம் சரியாக நடக்கும் என்று நினைத்த பொழுது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக சபரீசன் மது ஆலை தொடங்க உள்ளார் பலர் தற்போது புலம்ப துவங்கிவிட்டனர். இந்த விவகாரம் வரும் வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் தெரிகிறது.