24 special

திமுகவினர் செய்த செயலால்......அதிமுக எம்எல்ஏக்கள் கைது...என்னங்க சார் உங்க சட்டம்!

mk stalin , edapadi palanisami
mk stalin , edapadi palanisami

கோயம்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீ பாபர்வீன் தலைமை வகித்தார்.மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். ஆனால் நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது.


அப்போது தி.மு.க வார்டு உறுப்பினர் ரவிக்குமார் ஆத்திரமடைந்து கூட்டரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசினார். மேலும் அங்கிருந்த மைக்கை உடைத்து தாக்க முயற்சி செய்தார். இதையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது.அப்போது அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி கூட்டஅரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக கவுன்சிலருக்கு ஆதரவாக, நகராட்சி அலுவலகத்தி முற்றுகையிட முயன்ற அதிமுக எம்எல்ஏ., செல்வராஜ், அருண்குமார் உள்ளிட்ட 200 அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாற்காலியை எரிந்து வன்முறையை கையில் எடுத்த திமுக கவுன்சிலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது அதிமுக எம்எல்ஏ உட்பட நிர்வாகிகளை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று அதிமுக நிர்வாகிகள் கோபத்தை வெளிப்படுத்திள்ளனர்.மேலும் ஆட்சியில் இருக்கும் திமுகவின் கொத்தடிமைகள் அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இருப்பினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அமர்ந்து கொண்டு மக்களை வஞ்சித்து வருவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. அதாவது, இரண்டு தினங்களுக்கு முன் பெரம்பலூரில் பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கினர். அடுத்ததாக மேட்டுப்பாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்கினர். அதே நாளில் திண்டிவனத்தில் நகர்மன்ற கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் அவர்களு அமைச்சர் மீது குற்றச்சாட்டு வைத்தனர். அப்போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது திமுக அரசு.