Cinema

புஸ்ஸி ஆனந்தை ரிவிட் எடுத்த தளபதி.....இதனாலதான் வெற்றி விழா இப்படி நடந்ததா?

actorvijay , cinema
actorvijay , cinema

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வெளியான படம் லியோ. பல சச்சரவுகளை தாண்டி லியோ படம் திரைக்கு வந்தது. கடந்த மாதம் 19ம் தேதி வெளியான முதல் நாளே படத்தின் வசூல் 140 கோடி வசூல் சாதனை படைத்தது. இதன் வெற்றி விழா சென்னை நேரு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விஜி என்ன பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்திருப்பதாகவும் அவர்களும் ஆதார் அட்டை, நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் மக்கள் மன்றத்தில் உள்ள உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர கட்டுப்பாடுகள் விதித்தனர். மேலும், உறுப்பினர்கள் தவிர ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லையாம்.


இந்தவிழாவில் விஜய் ரசிகர்களுக்கு ஏன் அனுமதிக்க வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது, விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவரும் பங்கேற்பது என்று விஜி உடனே இருப்பவர் புஸ்ஸி ஆனந்த் இவரை விஜய் கடுமையாக திட்டியுள்ளாராம். காரணம் என்னவென்றால், லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா தடைபட்டதால் கோவத்தில் இருந்த மன்ற உறுப்பினர்கள் போஸ்டர் ஒட்டி கோவத்தை வெளிப்படுத்தினார்கள்.ஆனால், மன்றத்தில் இல்லாத ரசிர்கர்களோ என்ன செய்வது என்று தெரியாமல் லியோ படத்தின் ட்ரைலரின் போது ரோகினி தியேட்டரை அடித்து நொறுக்கி தங்களது கோவத்தை வெளிப்படுத்தினர். இதனை அறிந்த விஜய் புஸ்ஸி ஆனந்த் இடம் நீங்கள் என்ன மன்றத்தை பத்துக்கொள்கிறீர்கள் மன்ற உறுப்பினர்கள் இப்படி செய்யலாமா? மக்களிடம் நமக்கான பெயர் டேமேஜ் ஆகிவிட்டது இது சரியான நிர்வாக திறன் கிடையாது என்று புஸ்ஸி ஆனந்த் இடம் கோவத்தை வெளிப்படுத்தினார் விஜய்.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மன்ற தலைவர்களி அழைத்து கேட்டுள்ளார் எதற்காக இப்படி செய்திர்கள் மக்களிடம் விஜய் மீதும், மன்றம் மீதும் அவப்பெயர் ஏற்படுள்ளது என்று அவரகள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர். இதற்காக மன்ற தலைவர்கள் இந்த சம்பவத்திற்கும் நமது மன்ற உறுப்பினருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இது செய்தது எல்லாம் ரசிகர்கள் தான் என்று தெரிவித்தனர்.இதனை அப்படியே விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். உடனே விஜய் யோசித்துவிட்டு வெற்றி விழாவில் ரசிகர்கள் யாரும் பங்கேற்க கூடாது. என்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் இதேபோல் மன்னித்து நிகழ்ச்சிகளிலும் நடைமுறை படுத்த விஜய் அறிவுறுத்தினார். இதனை தான் நேற்று நடைபெற்ற விழாவில் கடைபிடிக்க பட்டதாகவும் தகவல் வந்துள்ளன.