24 special

ஐந்தறிவு என்றாலும் அன்பை புரிந்து கொள்ளும் ஜீவன்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ...! கண் கலங்க வைத்த பதிவு!

ELEPHANT
ELEPHANT

அன்பு என்பது உயிராய் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையானது தான், அதிலும் குறிப்பாக பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை அனைவரிடத்திலும் அன்பு என்பது தேவைப்படும் இடத்திலும் இருக்கிறது கொடுக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது! சிலர் ஒருவரை உருகி உருகி காதலித்து பிறகு காதல் தோல்வியால் தனது மொத்த வாழ்க்கையும் இழந்தது போன்று சுற்றிக் கொண்டிருப்பார்கள் ஏன் சிலர் காதல் தோல்வியால் தற்கொலைகளையும் செய்து கொள்வார்கள். அதே சமயத்தில் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் அன்பு தான் இயக்குகிறது என்று பலரும் அன்பை விட்டு விலகாமலும் அந்த அன்பிற்காக பல நேரங்களில் ஏங்கியும் தவித்தும் வருகின்றனர். சிலருக்கு எதிர்பார்க்கின்ற அன்பானது விரைவிலும் நீண்ட காலத்திற்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் எதிர்பார்க்கும் அன்பானது என்றுமே அவர்களை ஏங்க வைத்து மட்டுமே கொண்டிருக்கிறது.


மேலும் ஒருவர் கொடுக்கும் அன்பை மட்டுமே பெற்றுக்கொண்டு அவருக்கு பதிலுக்கு அன்பை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் செலுத்த தேவையில்லை, மனதார தோன்றினால் மட்டுமே அந்த அன்பானது நிச்சயமாக நமது செயல்கள் மூலமாக வெளிப்படும். அப்படிப்பட்ட அன்பு சிலருக்கு கிடைக்காமல் அவர்கள் தனிமையில் வாடி மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வடைந்து தேவையில்லாத மன அழுத்தங்களுக்குள் சிக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் தனிமையில் இருந்து விடுபடுவதற்கு பலர் தங்களை பல வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் அந்த வகையில் சிலர் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் வைத்து தன்னுடனே உறங்க வைத்து தன்னுடனை உண்ண வைத்து தனது மொத்த உலகத்தையும் அந்த வளர்ப்பு பிராணிகளோடு முடித்துக் கொள்வார்கள் தனிமையில் வாடுவதற்கு இந்த ஒரு வளர்ப்பு பிராணியே போதும் என்று அவற்றிற்கு பெயர்களை வைத்து அவற்றிற்கு ஏதேனும் ஒன்று என்றாலும் பதறிப் போய் துடிக்கும் மனித இதயம், அதோடு மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது..

ஆனால் பிரியம், வலி, மகிழ்ச்சி மற்றும் துன்பம் போன்ற உணர்வுகளை உணரும் திறனில் மனிதருக்கும் விலங்குகளுக்கும் இடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை என்று பிரபல அறிவியல் விஞ்ஞானி டார்வின் தனது கருத்தை முன்வைத்து வருகிறார்.  இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவை பார்க்கும் பொழுது நிச்சயம் அறிவியல் விஞ்ஞானி டார்வின் கூறியது உண்மைதான் என்பது தற்போது புலப்படுகிறது. அதாவது தன்னை வளர்ப்பவர், தன் உரிமையாளர் ஒரு நாள் வீட்டில் இல்லை என்றாலும் அங்கு வளர்க்கப்படும் செல்லப்பிராணி எந்தவித உணவையும் உண்ணாமல் அங்கும் இங்கும் அவரை தேடிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்பொழுது தன்னை வளர்த்த பாகனை இழந்த ஒரு யானை அவரது இறுதி சடங்கில் வந்து, தனது பாகன் எந்திரிக்காமல் படுத்து கிடப்பதை பார்த்து மிரண்டு, இனி தன் பாகன் தன்னை வந்து பார்க்க மாட்டாரா? தனக்கு உணவளிக்க மாட்டாரா? பேச மாட்டாரா என்று தன் கண்ணிலே அனைத்தையும் தெரிவித்து வருத்தத்தோடு தன் பாகனை பார்க்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த அனைவருமே மனதளவில் அந்த யானையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.