
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சிகள் அதற்கான வேலைகளை செய்து வருகிறது. தேர்தலை தொடர்ந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மோற்கொள்ள பயணம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து தமிழகம் வரும் பிரதமர் தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் தமிழகம் பயணம் மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டணி தொடர்பான முக்கிய விஷயத்தை பாஜக தலைவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் தமிழக பாஜகவிடமிருந்து முக்கிய தகவல் வெளியாகும் என தகவல் வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை நடத்தி தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக போன்ற பெரிய கட்சிகள் தொகுதி பங்கீட்டில் சமரசம் இல்லாமல் இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் தொடர் இழுபறி நடந்தாலும் தேர்தலை ஒருங்கிணைந்து சந்திக்கும் என்பதில் மாற்றமில்லை என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய மார்ச் வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு இருந்ததாம். அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியான தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் செல்லலாம் என கூறப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் நிலையில் இறங்கியுள்ளது. பாஜக பக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைத்துள்ளதால் மேலும் வலுப்படுத்தி பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறாராம். யாரை எல்லாம் அணுக வேண்டும், எங்கே பேச வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறாராம். இதனையெடுத்து இன்னும் இரண்டு நாட்களில் பாஜக தலைமையிடம் இருந்து கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார். ஒரு பக்கம் பாஜக கூட்டணியில் வரக்கூடிய நாட்களில் மாற்று கட்சியினர் பாஜகவில் ஐக்கியமாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கூட்டணியிலும் கவனம் செலுத்தி வருவதால் இந்த முறை தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
பிரதமர் மோடி சொன்ன யுக்தியானது பாஜகவில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை இணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அமைந்தால் அதிமுக கட்சி தனிமையில் நிற்கும் என்றால் அரசியல் களமானது அப்படியே தலைகீழாக மாறலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.