
பிகார் அல்லது பீகார் இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்,பகல்பூர் நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள 800 அடி உயரமுள்ள கிரானைட் மலையின் பரந்த நிலப்பரப்பான மந்தர் மலை, நாம் அனைவரும் ஏற்கனவே கேட்டுள்ள கதைகளில் ஒன்றுதான் இந்த இடம். கடலில் பாசுகி நாக் என்ற புனித பாம்பு, கயிற்றாக தன்னை முன்வைத்தது அமிர்தம் கடையும் கதை நாம் அறிந்ததே. அத்தனை பெருமைகளுக்கு உரிய புராணங்களை கொண்டது தான் இந்த மந்தர் மலை. இது மிகவும் சிறப்பு வாய்ந்த மேலும் பல வரலாறுகளை உள்ளடக்கி உள்ள மழை என்று கூறுகின்றன.மேலும் இக்கோவிலில் மகர சங்கராத்திரி, ரத யாத்திரை, ஜென்மாஸ்திமி மற்றும் துர்கா பூஜை ஆகியவை விஜயத்தை அனுபவிக்க முக்கிய பண்டிகை காலங்களாகும்.கோவிலுக்கு செல்வதற்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் போன்ற முக்கிய உள்ளூர் போக்குவரத்து பயன்படுகிறது.
மேலும் இக்கோவில் மிகவும் அமைதியான சூழலில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, இதனை ஒட்டி அதன் பக்கத்தில் சங்கு குளம் ஒன்று உள்ளது. இந்த மலையானது அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்த இடம் என்று தலவரலாறு கூறுகின்றது. இந்த மலையில் உள்ள சங்கு குளத்தில் ஒரு அதிசய சங்கு ஒன்று உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த சங்கு என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் இந்த சங்கு மூலம் கடலைக் கவ்வதன் மூலம் பெற்ற ஹாலாஹல் விஷத்தை கழுத்து வரை தாக்கியதால், கழுத்து நீலமாகவும், அவரது பெயர் நீலகண்டமாகவும் மாறியது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் சங்காக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கினை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று நம் மனம் சொல்லும்!! அந்த அளவிற்கு பல அற்புதங்கள் இந்த சங்கினை பார்த்தவர்களுக்கு நடந்திருக்கிறது. தற்போது இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
மேலும் இக்கோவிலின் அதிசயங்கள் என்னவெனில் இக்கோவிலில் உள்ள சங்கு வருடத்தில் 364 யாராலும் பார்க்க முடியாத அளவுக்கு 70 முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். சிவன் ராத்திரிக்கு முந்தைய நாள் மட்டும் இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஆனால் சிவன் ராத்திரிக்கு அடுத்த நாள் சென்று இக்குளத்தை பார்த்தால் இக்குளத்தில் தண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்து சங்கு தண்ணீரில் மூழ்கி விடும். யாரும் பார்க்க முடியாத அளவுக்கு சென்றுவிடும். மீண்டும் அந்த சங்கு அடுத்த வருடம் சிவன் ராத்திரிக்கு முந்தைய நாள் மட்டுமே மக்களின் கண்ணில் தென்படும். இந்த சங்கினை பார்ப்பவர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்களும் அதிசயங்களும் நிகழும் என்பது அங்கு உள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுவரை இங்கு உள்ளவர்களுக்கே ஏன் இப்படி நிகழ்கிறது?? ஏன் இந்த சங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கண்ணில் தென்படுகிறது?? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது!! இருப்பினும் இது மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகவும், பலர் வந்து வேண்டி செல்லும் விஷயங்கள் நடப்பதாகவும் சொல்கின்றனர். கோவிலில் உள்ள காளி எட்டு கை தலையில்லாத காளி. இந்த காளி மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் கூறுகின்றனர்.தற்போது இக்கோவில் பற்றிய விவரங்கள் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவிலை பற்றி வீடியோ மூலம் அறிந்தவுடன் அங்கு சென்று பார்க்க வேண்டும் ஆர்வம் அனைவருக்கும் மத்தியில் வருகிறது. உங்க போக நினைப்பவர்கள் உடனே குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்!!