24 special

குற்றம் சாட்டிய பினராயி..! புரட்டி எடுத்த மத்திய அமைச்சர்..!


கேரளா : கேரள மாநிலம் பயங்கரவாத குழுக்களின் சொர்க்கபுரியாக திகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. அதற்கேற்றாற்போல தடைசெய்யப்பட வேண்டியஅமைப்புகளான எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ  போன்றவை கொலை சம்பவங்களின் நேரடி தொடர்பிலிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் கூறிய குற்றசாட்டிற்கு மத்திய இணையமைச்சர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


கடந்த வார இறுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது " கடந்த 2021ல் இந்தியாவின் பல பகுதிகளில் 486 தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளது. நமது மாநிலத்திலும் அம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெறும் என சங்கபரிவாரை சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் மாற்றமாநிலங்களை போலல்லாமல் நமது கேரள மாநிலத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு தெரியும்" என மத்திய அரசையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் விமர்சித்திருந்தார். இது கேரள பிஜேபியை உசுப்பிவிட்டது. நேற்று இதுகுறித்து மத்திய அமைச்சர் முரளிதரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

"பினராயி விஜயனின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க தேவையில்லை என நான் கருதுகிறேன். அது ஒரு கட்டுக்கதை. எந்த அடிப்படையில் பிஜேபியை முதல்வர் குற்றம் சாட்டுகிறார் என தெரியவில்லை. மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு பிஜேபியை குற்றம் சுமத்தினால் மாநில அரசுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என அர்த்தமாகிறது. 

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் இந்திய அரசுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என அரசியலமைப்பு சட்டம் எடுத்துரைக்கிறது. பினராயி தர்க்கத்தாலும் தனது வாதத்தாலும் பிஜேபிதான் பொறுப்பு என கூறினால் கேரளாவில் நடக்கும் வன்முறைகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். 

மாநில அரசாங்கத்தின் ரகசிய அரவணைப்பு இல்லாமல் ஆலப்புழாவில் நடந்த கூட்டத்தில் அப்படி ஒரு கோஷம் எழுப்பப்பட்டிருக்க முடியாது. பயங்கரவாதிகளிடம் கேரள அரசு மெத்தனப்போக்குடன் நடந்துகொள்கிறது. பயங்கரவாத குழுக்களின் மீதான நடவடிக்கைகளில் அந்த குழுக்களுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது"என மத்திய அமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.