24 special

உள்ளாட்சித்தேர்தல்..! பிஜேபி பக்கா பிளான்..!


ஹரியானா : ஹரியானா மாநிலத்தில் ஜேஜேபி மற்றும் பிஜேபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் கைதையடுத்து மாநில அரசியலில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க மாநில பிஜேபி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


கடந்த 2020ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக் ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பிஜேபி எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. அதேபோல கூட்டணியாக ஜேஜேபி யின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா சொத்துகுவிப்பு வழக்கில் அதிரடியாக கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறைத்தணடனைக்கும் ஆளாக்கப்பட்டார்.

இதனால் ஜேஜேபி தனது காட்சிக்கூட்டம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டது. மேலும் மறு அறிவிப்பு வரும்வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் ஹரியானா தற்போதைய துணை முதல்வரான துஷ்யந்த் சௌதாலா ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் துஷ்யந்தின் சகோதரர் திக்விஜய் செய்தியாளர்களிடம் " எனது தாத்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் துரதிர்ஷ்டாவசமானது. உயர்நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம்" என கூறினார். மேலும் பிஜேபி தரப்பில் ஓம் பிரகாஷுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என ஜேஜேபி கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கூட்டணி முறிவை பிஜேபியோ ஜேஜேபியோ அறிவிக்கவிட்டாலும் ஜூன் 19 அன்று நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி தனித்து போட்டியிடும் என மாநில பிஜேபி தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் தெரிவித்துள்ளார். ஜூன் 30 மற்றும் 31ல் ஒவ்வொருமாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் உள்ளூர் தலைவர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து ஜூலை 1 அன்று பஞ்சகுலாவில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள் என்றும் மாநில பிஜேபி தலைவர் தெரிவித்துள்ளார்.