24 special

கார்த்திக் கோபிநாத் "கைது" அடுகடுக்காக எழுத்தாளர் எழுப்பிய கேள்வி?

karthik gopinath
karthik gopinath

இளையபாரதம் எனும் யூடுப் சேனலை நடத்தி வருபவர் கார்த்தி கோபிநாத், இவர் தேசியம் சார்ந்த கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார், இந்த சூழலில் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து ஏமாற்றிவிட்டதாக இவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் கார்த்தி கோபிநாத்தை கைது செய்து இருப்பதாக ஆவடி மாநகர காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.


இதற்கு இடையில் சுப்பிரமணிசாமி கார்த்தி கோபிநாத் கைதை கண்டித்து இருக்கிறார், தற்போது எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் கார்த்தி கோபிநாத் கைது குறித்து காவல்துறை தெரிவித்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் அதில், இது என்ன வாதம் என்று புரியவில்லை..கோவிலை புனர்நிர்மாணம் செய்கிறேன் என வசூல் செய்த பணம் அப்படியே milaap ல் உள்ளதென பொதுவெளியிலே போட்டுள்ளார் திரு.கார்த்திக் கோபிநாத்..

பணத்தை கொடுத்தவர்கள் யாராவது வந்து என் காசை திருடிவிட்டார் கா.கோ என்று புகார் கொடுத்தால்,அதை விசாரிப்பதில் நியாயம் உள்ளது.பணம் தவறாக செலவு செய்யப்படவில்லை என்று கணக்கை கொடுத்தாலோ,அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டாலோ இதில் பிரச்சனையே கிடையாது..

இந்த பிரச்சனையில் இந்து அறநிலையத்துறை ஏன் வருகிறது? இந்து அறநிலையத்துறை பேரில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதா? அல்லது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பணம் வந்த பிறகு தவறு நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டதா?

இது,திரு.சு.சாமி சொல்கிறபடி Article 25 னை மீறும் விதமாகவே உள்ளது.தனிநபர் மதத்தை கடைபிடிக்கவும்,அதை பரப்ப,பாதுகாக்க நிதிகளை திரட்ட முழு சுதந்திரம் உண்டு.நிதி கொடுத்தவன் புகார் கொடுக்காத வரை அதில் அரசு தலையிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.