இந்தியா : அமெரிக்காவில் இயங்கும் நிறுவனமான போயிங் தற்போது இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் மெகா கன்ஷிப் ஒப்பந்தங்களை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இந்தியாவின் சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர் பதட்டம் நிலவிவருவதை கருத்தில் கொண்டு இந்திய அரசு விமானங்களை வாங்க முடிவெடுத்திருக்கிறது.
நீண்டகாலமாக அப்பாச்சி கன்ஷிப் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அதில் போயிங் எந்த ஒரு சலுகையும் வழங்கவில்லையென கூறப்படுகிறது. அதையடுத்து இந்தியா மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் விமானங்களை தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான முஸ்தீபுகள் HAL நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் போயிங் நிறுவனம் இந்தியாவிற்கு அறுபது அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்க முன்வந்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது மூன்று நிர்த்தபடைப்பிரிவுகளுக்கு ராணுவ போக்குவரத்து மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.
IAF 22 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் உடற்பகுதிகள் டாட்டா போயிங் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் ஆல் கட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பச்சி கனரக ஹெலிகாப்டர் மற்றும் LCH எனப்படும் இலகுரக ஹெலிகாப்டர் ஒன்றுக்கொன்று அதன் தேவைகளை பூர்த்திசெய்யும் என நம்பப்படுகிறது. இதனால் எந்தவொரு போட்டியும் இல்லை என போயிங் அதிகாரிகள் MOD அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இந்த இலகுரக மற்றும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எல்லைப்பகுதிகளில் இந்த ரக ஹெலிகாப்டர்களின் சேவைகள் மிகத்தேவையான மற்றும் முக்கியமான ஒன்றாக இருக்கும் எனவும் MOD அதிகாரிகள் கூறிவருகின்றனர்.