24 special

இந்தியாவை பகைத்த கனடா பிரதமருக்கு மிக பெரிய ஆப்பு...! கனடா மக்கள் கொடுத்த தீர்ப்பு...!

pm modi
pm modi

தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிராகவும் இந்தியாவின் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த சில நாட்களாக இந்தியாவின் உளவு அமைப்புகள் மீதும் குற்றம் சுமத்தினார்.காலிஸ்தான் தீவிரவாதியை கொன்றது இந்திய உளவு அமைப்புதான் என வெளிப்படையாக குற்றம் சுமத்தினார். இதற்கு இந்தியா கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது, இந்த சூழலில் அரசியல் காரணங்களுக்காகவும் காலிஸ்தானி ஆதரவு பெற்ற கட்சியுடன் ட்ருடோ கூட்டணியில் இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக இப்படி செயல்படுவதாக பலரும் விமர்சனம் செய்தனர்.இந்த நிலையில் கனடா பிரதமர் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது அதில், 


லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தற்போது பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். கனடாவில் அடுத்த பிரதமர் தேர்தல் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது.கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இந்தியாவின் காஸ்மீர் விஷயத்தில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மலேஷியா பிரதமர் மெகாதீர் முகமது  அவரது பதவியை இழந்ததும் அதற்கு இந்தியாவின் உளவு அமைப்பே காரணம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.