கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகப்போகிறது செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் ரெய்டு நடந்து முடிந்து பின்னர் அவரது மீது கைது நடவடிக்கை எடுத்து, அந்த நடவடிக்கை காரணமாக அவர் தற்பொழுது சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்தபடி அவர் சொகுசாக இருந்து வருகிறார் என பல்வேறு தரப்பில் இருந்து முதலில் விமர்சனங்கள் எழுந்தது, ஆனால் அதன் பிறகு சிறைத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையால் அவருக்கு வழங்கப்பட்ட சில வசதிகளும் பறிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்தது.இந்த நிலையில் கரூர் கும்பல் குறிப்பாக அவரது மனைவி மேகலா தரப்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டி வழக்கறிஞர் கபில் சிபில் போன்ற இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்களை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து ஜாமீனுக்கு கடந்த இரண்டு மாதமாக நீதிமன்றத்தில் போராடி வருகிறது. ஆனால் அமலாக்கத்துறையின் 3000 பக்க குற்ற பத்திரிக்கை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சிக்கலை ஏற்படுத்துகிறது, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்க குறைந்தது இரண்டு வருடமாகும் என சட்ட வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் மறுபுறம் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியில் இருந்து தான் விடுவிக்கப்படவில்லையே தவிர கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி பார்த்து வந்த பொறுப்புகள் மற்றும் அவரது துறை எப்படி மற்றவர்களுக்கு மாற்றப்பட்டதோ அதுபோல கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சில வேலைகள் அடுத்தடுத்த திமுகவின் முக்கியஸ்தர்களுக்கு மாற்றப்பட்டதாக சில அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செந்தில் பாலாஜியை வைத்து நாம் அரசியல் செய்தாலோ செந்தில் பாலாஜியை ஆதரித்து நம் விமர்சனம் செய்தாலோ அது நமக்கே பின்னடைவாக மாறும் என உணர்ந்த திமுக தலைமை வேறு தற்போது செந்தில் பாலாஜியை பற்றி பேச்சு எடுப்பதையே குறைத்து வருகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இப்பொழுது பேசும் பொழுதெல்லாம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது விவகாரம் குறித்து முதல்வர் பேசவே இல்லை கவனித்தீர்களா? என அரசில் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அந்த அளவிற்கு செந்தில் பாலாஜியை தற்பொழுது ஒரு சுமையாக திமுக நினைக்க துவங்கி விட்டது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற கொங்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்திலும் முதல்வர் செந்தில் பாலாஜியின் பெயரை உச்சரிக்க கூட இல்லையாம், இவ்வளவிற்கும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண்டலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னமும் கரூர் பகுதியில் நிறைய ஆதரவாளர்களை கையில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜியின் பெயரை முதல்வர் குறிப்பிடாமல் சென்றது செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இனி செந்தில் பாலாஜியை அறிவாலயம் மறந்து விட்டது அவ்வளவுதான் என்ற தகவல் வேறு செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.செந்தில் பாலாஜி தம்பி இன்னும் தலைமறைவாக தான் இருக்கிறார் இந்த விவகாரத்தில் ஏதாவது செய்தாக வேண்டும் என தற்பொழுது கரூர் கேங் முயற்சித்து வருகிறது என சில தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில் கண்டிப்பாக செந்திபாலாஜி குடும்பத்தினரே திமுகவிற்கு தலைவலியாக மாறலாம் என வேறு அரசியல் விமர்சகர்கள் கணித்து கூறுகின்றனர்.