நடிகர் விஜயை தொடர்பு கொண்டு நடிகர் ஷாருக்கான் பேசிய நிகழ்வும், போனில் பாஜக எவ்வளவோ மேல் என இருவரும் பேசிய சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றன, லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது அரசியலிலும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காகம் -கழுகு கதை ஒன்றைக் கூறினார். அப்போதே அவர் காகம் என்பதை விஜய்யை குறிப்பிட்டு தான் பயன்படுத்தினார் என்று சமூக தளங்களில் சர்ச்சை எழுந்தது.அந்த விழாவில் பேசிய கலாநிதி மாறன்… ‘சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் 73 வயதிலும் அவரைச் சுற்றி தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இந்த வயது வரை நீங்கள் நடிப்பீர்களா பார்க்கலாம்’ என்று விஜய்யை மறைமுகமாக தாக்கினார் என்றும் பேச்சுகள் எழுந்தன.இந்த பின்னணியில் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் இருக்க வேண்டும், ஆனால் அது வெளிப்படையான அரசியலாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விஜய்க்காக ஒரு குழுவே அவரது உரையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டது.
இவ்வாறு விஜய் ரசிகர்கள் இருதரப்பும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த நிலையில்… நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவது என முடிவாகி அதுதொடர்பாக காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது.காவல்துறை தரப்பில், ‘செப்டம்பர் 10ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அதிக நெரிசல் ஏற்பட்டு அது பெரும் பிரச்சனையானது.அது மாதிரி எதுவும் இந்த விழாவில் நடந்து விடக்கூடாது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 5000 முதல் 6000 பேர் வரை அமர முடியும்.ஆனாலும் உங்கள் விழாவுக்கு அதிகபட்சம் 5,000 பேர் வரை தான் அனுமதி தர முடியும். மேலும் அரங்கத்திற்கு வெளியே ரசிகர்கள் திரண்டு நிற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர்.தயாரிப்பாளர் தரப்பு இதுகுறித்து விஜய்யுடன் ஆலோசித்தது. லியோ பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்களை வரவேண்டாம் என்று தவிர்க்க முடியாது. அதே நேரம் இது பான் இந்தியா படம் என்பதால் பல்வேறு விஐபிக்களும் தங்கள் தரப்புகளுக்கு பாஸ் கேட்கிறார்கள்.
மேலும் உள்விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே ரசிகர்கள் திரண்டு நிற்க கூடாது என்று போலீஸ் நிபந்தனை விதிக்கிறது. அதை நம்மால் நிறைவேற்ற முடியாது என்று விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது.விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இது தொடர்பாக தயாரிப்பாளர் லலித்குமாரிடம்… ரசிகர்களின் ஆதார் கார்டுகளைப் பெற்று அதன் மூலம் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறிப்பிட்ட ரசிகர்களை மட்டும் வரவழைத்து நிகழ்ச்சி நடத்தலாமா என யோசனை கேட்டு இருக்கிறார்.ஆனால் தயாரிப்பாளர் தரப்பிடம் பேசிய காவல்துறையினர்… ‘ சார் நிகழ்ச்சிக்கு முன்னால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யலாம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவு திரண்டு விட்டால்… இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அது போலீசுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் கெட்ட பெயராகத்தான் முடியும்.நாங்கள் விதிக்கும் நிபந்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால் அனுமதி தருகிறோம்’ என்று கூறியுள்ளார்கள்.இதற்கிடையே இந்த நிகழ்ச்சியை சென்னையில் தான் நடத்த வேண்டுமா புதுச்சேரியில் பிரமாண்டமாக நடத்தலாம் என்று புஸ்ஸி ஆனந்த் யோசனை கூறியுள்ளார். அதேபோல கேரள விநியோகஸ்தர்கள் தரப்பில் இந்த முறை லியோ ஆடியோ லாஞ்ச்சை கேரளாவில் நடத்துங்களேன் என்றும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.
இப்படி சென்னையில் ஒரு சிக்கல் இருப்பதை அறிந்த ஷாருக்கான், நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு, ‘உங்க லியோ ஆடியோ லாஞ்ச் விழாவை மும்பையில் நடத்துங்க’ என்று யோசனை தெரிவித்துள்ளார்.ஆனால் தமிழகத்தில் இப்படி ஒரு நிலை இருக்கும் என விஜய் வேதனை அடைந்து இருக்கிறார் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் பல காட்சிகள் நேரடியாக பாஜக மற்றும் பாஜக அமைச்சர்களை விமர்சனம் செய்யும் விதமாக படத்தில் திரை கதை இருக்கும் ஆனால் பாஜக அந்த படத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.இத்தனைக்கும் சினிமா சிட்டி மும்பையில் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது, தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது அங்கும் விஜய்க்கு எந்த பிரச்னையும் இல்லை ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் மறைமுகமாக தனது ஆதரவை விஜய் திமுகவிற்கு கொடுத்த நிலையில் தற்போது பெரும் சிக்கலில் சிக்கி இருப்பதாக வேதனை தெரிவித்து இருக்கிறார்.விஜய் இப்படி புலம்ப உதயநிதி நிறுவனத்திற்கு படத்தின் வெளியீட்டு உரிமையை தராததே காரணமாக கூறப்படும் நிலையில் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதன் மூலம் அது உறுதியாகி இருக்கிறது.
இந்த சூழலில் விஜய் ரசிகர்கள் கடுமையாக தற்போது திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர் அன்று சிம்பு மாநாடு திரைப்படத்தை வெளியிட படாத பாடு பட்டார் சிம்பு பெற்றோர் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் நின்றனர் அதே போல் விஜயை செய்ய வலியுறுத்துகிறதா தமிழக அரசு.ஏன் திமுக நடத்தும் பொது கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடிகிறது, அதிமுக மதுரையில் நடத்திய மாநாடிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடிந்தது ஆனால் லியோ ஆடியோ லாஞ்சிற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா? என விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.தமிழகத்தில் மெல்ல மெல்ல விஜய் ரசிகர்கள் திமுக எதிர்ப்பு மன நிலைக்கு சென்று வரும் நிலையில் அன்றே திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் திரை துறையினர்தான் பாதிக்க படுவார்கள் என அன்றே பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை கொடுத்து இருந்தார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது உதயநிதி அப்போது பார்க்கலாம் என மழுப்பிய நிலையில் அண்ணாமலை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என விஜய் அரசியலுக்கு வருவது நல்லது என வரவேற்றது குறிப்பிடத்தக்கது.