தற்போது கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு சுவாச பிரச்சினை இருப்பதாகவும் அதன் காரணமாக அவரால் சுவாசிக்க முடியவில்லை எனவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு தொண்டையில் துளையிட்டுதான் அவருக்கு சுவாசத்தை சேர்க்கையாக கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும், விஜயகாந்த் இன்னும் இரு வாரங்களை கடந்தால் மட்டுமே அவரது உடல்நிலை சரியாகும் எனவும் வேறு மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும், விஜயகாந்த் அவர்கள் பழையபடி எங்களுக்கு கேப்டனாக வரவேண்டும் எனது கட்சியின் தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எப்படி இருந்த மனுஷன்? இப்போ இருக்கக்கூடிய 2கே கிட்ஸ்க்கு விஜயகாந்த் பற்றி தெரியாது அவர் ஒரு காலத்தில் அவர் வந்து நின்றாலே போதும் அந்த அளவிற்கு ஆளுமைத் திறன் உள்ளவர் எனக்கூறி தற்பொழுது அவர் ஞாபகத்தில் பலரும் பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் தற்பொழுது விஜயகாந்த் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, வருகிறது, அந்த வீடியோவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததற்கு பிறகு அவரது இறுதி சடங்கில் விஜயகாந்த் செய்ததுதான் தற்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்த பொழுது நடிகர் சங்க தலைவராக இருந்தவர் விஜயகாந்த், இப்பொழுது இருக்கும் படி அப்பொழுது சமூக வலைதளம் எல்லாம் அவ்வளவாக கிடையாது, செல்போன் புழக்கமே அப்போது அதிகமாக கிடையாது.
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்த பொழுது மக்கள் விஷயம் தெரியாமல் அவரது இறுதி ஊர்வலத்தில் அதிகமாக கூடிவிட்டனர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் யாருக்கும் எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை, எம்ஜிஆர் இறந்ததற்கு பிறகு அவரது சமகாலத்தில் வாழ்ந்த கலைஞன் மறைவுக்கு ரசிகர்கள் பெருத்த கண்ணீருடன் அங்கு கூடியது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தயங்கினர்.
அப்பொழுது விஜயகாந்த் செய்த செயல்தான் வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த இறுதிஊர்வலத்தில் ஒற்றை ஆளாக வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அந்தக் கூட்டத்தில் இறங்கினார் கேப்டன், கிட்டத்தட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தில் முதல் கட்சியில் ராம்சரண் எப்படி ஒட்டுமொத்த கூட்டத்தில் இறங்கி ஒரு கைதியை அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் கல் விட்டு அடித்த கைதியை கைது செய்து தூக்கிக் கொண்டு வருவாரோ அதேபோல் அந்த மொத்த கும்பலிலும் வேட்டியை மடித்து கட்டி இறங்கி தன் கையில் வைத்திருந்த துண்டை வைத்து அனைவரையும் அடித்து விரட்டி அந்த இடத்தையே இறுதி ஊர்வலம் வண்டி செல்லும்படி வழி விட வைத்தவர் விஜயகாந்த்.
அதன் பின்னர் அவ்வளவு பெரிய எடை கொண்ட அந்த பிரேதத்துடன் இருந்த ஐஸ் பெட்டியை அதுவும் சிவாஜி கணேசன் உடல் கடத்தப்பட்டிருந்த ஐஸ் பெட்டியை தனியாக வண்டி மீது ஏறி நின்று தூக்கி அதை வைத்து அதை மக்கள் பார்வையில் படும்படி வைத்து இவர் தூக்கி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
இது போல் ஒற்றை ஆளாக நின்னு சாதித்து காட்டியவர் கேப்டன் ஆனால் இன்று அவர் இருக்கும் நிலையை பார்த்தால் கண்கள் கலங்குகின்றன என அவரது ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்ன இருந்தாலும் கேப்டன் கேப்டன் தான் எனவும் வேறு கமெண்ட்டுகள் இதற்கு அதிகமாக எழுதப்படுகின்றன. எங்கள் கேப்டன் மீண்டு வர வேண்டும் அவர் எங்களை பார்த்து கையைசைத்தால் போதும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்காக காத்திருக்கின்றனர்.