அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவாக்கத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மக்கள் இடத்தில் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கில் இதை செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளார்.
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த அங்கித் திவாரி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ் பாபுவுடன் ஒரு வழக்கில் நீங்கள் சிக்கவிருக்கிறீர்கள், அதில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் பணம் வேண்டும் என பேரம் பேசி இறுதியில் 20 லட்சம் ரூபாய் முன்பணத்தை கேட்டு மிரட்டியதாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் தமிழ்நாட்டில் தற்போது அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணத்தில் தான் தற்போது தமிழக அரசு ரிவெஞ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
“மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் ரெய்டு நடத்தினார்கள். அங்கித் திவாரியை தவிர்த்து வேறு சில வழக்குகள் சம்பந்தமான ஃபைல்களை அவர்கள் எடுத்துள்ளனர். அந்த ஃபைல்களை அங்கித் திவாரியின் அறைக்கு கொண்டு சென்று பூட்டிவிட்டு, சிலருக்கு போன் செய்து கூறியுள்ளனர். அங்கு ரெய்டு நடத்தச் சென்ற 35 பேரில் ஒருவர்தான் ஐ.டி கார்டை காட்டி உள்ளார். ரெய்டு முடித்த பிறகு வழங்கிய பஞ்ச் நாமா-வில் 4 பேர்தான் கையெழுத்து போட்டுள்ளார்கள். மற்ற 31 பேரும் கட்சிகாரர்களா, அமைச்சரின் ஆட்களா எனத் தெரியவில்லை. அமலாக்கத்துறை சி.சி.டி.வி-யை எடுத்து பார்க்கத்தான் போகிறார்கள்.
எனவே, அமலாக்கத்துறை கொடுத்த புகாரின் பேரில் டி.ஜி.பி அந்த புகாரை ஆழமாக எடுத்து, மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கேஸ் ஃபைல்கள், இன்ஃபார்மர்ஸின் பெயர்கள் உள்ளன. எனவே அங்கு நடந்தது என்ன என்பது குறித்து டி.ஜி.பி அறிக்கையாக சொல்ல வேண்டும். தமிழக போலீஸில் எத்தனை பேர் கடந்த ஆண்டு கைதாகி உள்ளார்கள். மனிதர்கள்தான் அமைப்புகளுக்குள் இருக்கிறார்கள். தனி மனிதனை மனிதனாக பாருங்கள். யார் தவறு செய்திருந்தாலும் விடக் கூடாது. அமலாக்கத்துறையை, தமிழக போலீஸை ஆதரிப்போம், மின்சாரத்துறையை ஆதரிப்போம். ஆனால், தவறு செய்பவர்களை எதிர்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அமைச்சர் தரப்பினர் தாக்கிய விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது அந்த நபர்கள் ஜாமின் கிடைக்காமல் சிக்கி திணறி வருகின்றனர். இப்போது மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு சீண்டியுள்ளதால் விரைவில் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது.