24 special

திமுகவின் காவிரி தீர்மானத்திற்கு....வன்மையாக கண்டித்த கட்சி தலைவர்!

mkstalin
mkstalin

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தொடர்ந்து தர கர்நாடகா அரசு மறுக்கின்றது. இதனால் தமிழகத்தில் இருக்கும் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுக அரசு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பால் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விட மத்திய அரசு வலியறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். 


இந்த தீர்மானம் குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழகம் கட்சி தலைவர் பழ கருப்பையா தனது கருத்தை கூறினார். அதில், "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், கர்நாடகர்கள் கேட்கவில்லை. காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டும் அவர்களுக்கு திறந்து விட மனமில்லை. மத்திய அரசு திறக்க வேண்டாம் என்று சொல்கிறதா? நீங்கள் காங்கிரஸ் கட்சியை தான் கேட்க வேண்டும். அதை விட்டு மத்திய அரசை உள்ளே இழுப்பது தவறானது. அது வேற அரசு கர்நாடகாவில் இருப்பது காங்கிரஸ் அரசு அதனை நீங்கள் கேட்க வேண்டும். காவேரி ஆணையத்தின் உத்தரவை மீறி அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசு தனி அதிகாரத்தில் உள்ளது. மாநில அரசு தனி அதிகாரத்தில் உள்ளது. 

கர்நாடகாவில் இருப்பது காங்கிரஸ் அரசு உன்னோட கூட்டணியில் உள்ள அரசு உங்களின் அதிகார பவரை இந்த மாதிரியான சூழலில் பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால் கூட்டணி தலைவர் ராகுல் போன்றவர்கள் சோனியா காந்தியிடம் கூறி தண்ணீர் திறக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாடு மக்கள் எப்படி நமக்கு வாக்களிப்பார் என்று கூற வேண்டும் இதையெல்லாம் செய்வதை விட்டு விட்டு மத்திய அரசை வலியறுத்துவது வேண்டும் என்பது போல் எதற்கு நாடகமாடுகிறீர்கள். பிஜேபி கூட்டத்தொடரில் இருந்து வெளியேறியது வரவேற்கத்தக்கது. 

இந்த விவகாரத்தில் ஒரு நிலையான தீர்வை எடுக்க ஆலோசனை செய்ய வேன்டும். மக்களை தூண்டி விடு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல அங்கேயே இருப்பவர்கள் உங்களின் தண்ணீரை அவை பறித்து கொள்ள பார்க்கிறான் என்றும் இங்கே இருக்கும் மக்களிடம் உன்னுடைய தண்ணீரை அவன் தர மறுக்கிறான் என்று தூண்டி விட்டு நாடக மாடுகின்றனர். அவன் தண்ணீர் தர மறுக்கையில் மீண்டும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடுவதால் எதற்காக நதி நீர் ஆணையம், எதற்காக மாநில அரசு இரண்டும் சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

இப்போது மத்திய அரசு சொன்னால் மட்டும்கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுமா? மத்திய அரசு சொல்லியும் தண்ணீர் தர வில்லை என்றால் மேட்டூர் அணையில் விழுந்து விடுவீர்களா என்று திமுக அரசை விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் அவர்கள் நிலத்திற்கு தேவையான தண்ணீரை கம்மாயில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை நேர்ந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான  தண்ணீரை பங்கீடு செய்கின்றனர். ஆனால் காவிரி நீர் விவகாரத்தில் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த அரசு கூட்டணி கட்சியில் இருக்கும் அரசிடம் எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. "

உன்கொப்பேன் கட்சியை கொடுத்துவிட்டால் உன் சவுரியத்தை அனுபவித்து இருப்பாயா என திமுகவை விமர்சித்தார்".  உனக்கு ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும். மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதற்காக ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள் தானே என தெரிவித்தார்.தேவையில்லாமல் திமுக ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே இதுபோல திமுக அரசு செயல்படுகிறது. தமிழக மக்களை விட உனக்கு கூட்டணி தான் தேவையா. அப்படி பிஜேபி அரசு கர்நாடகாவை தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுத்து விட்டால் இங்கே நீங்கள் தூக்கு போட்டுக் கொள்வீர்களா" என்று சரமாரியாக திமுக அரசை தாக்கி தனது கருத்தை தெரிவித்தார்.