தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள படம் லியோ. தளபதி விஜய் அரசியலுக்கு வருவது இந்த படத்தில் நடித்து கொண்டு இருக்கும்போது உறுதியானது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மறுபக்கம் ஜெயிலர் படம் அடுத்ததாக இதுவரை பெரிய படம் வெளியாக காரணத்தால் வெறிச்சோடி இருக்கும் திரையரங்குகளுக்கு லியோ படத்தின் மூலம் வசூலை குவிக்கலாம் என்ற எண்ணத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.
முதலாவதாக இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்காக காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் தீடிரென்று ஆடியோ வெளியிட்டு விழா இல்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு மூலம் தெரிவித்தது அதற்கு ரசிகர்கள் இது எல்லாம் திமுகவின் சதி வேலைகள் என்று போஸ்டர் ஒட்டியும், சமூக வலைத்தளத்திலும் கருத்தை முன் வைத்தனர். ஒரு பக்கம் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு காவலர்கள் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருந்ததாகவும் கருத்துக்கள் எழுந்தது.
தொடர்ந்து பல வகையான சர்ச்சைகள் லியோ படத்திற்கு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரசிகரக்ள் ஒன்று திரண்டு சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ட்ரைலரை கண்டு களித்தனர். அப்போது தியேட்டர் முழுவதும் சேத படுத்தினர். அதற்கு நீதிமன்றம் காவலர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். தற்போது எப்படி காவலர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படலாம்? பொது இடத்தில் நிகழ்ச்சி நடந்து இருந்தால் காவலர்களிடம் கேட்கலாம் என ஒரு காணொளி சமூகத்தளத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி அதற்கு காவலர்களின் சரியான பாதுகாப்பு இன்மையால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் விஜய் அவர்களை நினைத்து பார்த்தால் பரிதாபமும், மனா வருத்தமும் தான் ஏற்படுகிறது. காரணம்,தியடரில் ரசிகரக்ள் படம் பார்க்க சென்றால் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு அமரக்கூடிய இருக்கையின் பின் புறம் ஏறி நின்றால் என்னவாகும் என்று தெரியாமல் போகுமா? இப்போது தியேட்டரில் சேத படுத்தப்பட்ட அந்த காட்சிகள் சமூக தளத்தில் வைரலாக்கப்படுகிறது. ஏனெனில் இந்த ரசிகர்களை வைத்து கொண்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வர விருப்பப்படுகிறார் என்ற கேள்வி சமூக தளத்தில் எழுந்துள்ளது. ட்ரைலரை காண போனால் அதனை மட்டும் பார்த்து விட்டு வந்தால் போதாதா மேலும், ஏதற்கு இந்த அலப்பறை ரோகிணி மட்டும் இல்லை எங்கு எல்லாம் ட்ரைலர் ஒளிபரப்பட்டதோ அங்கு எல்லாம் பிரச்சனைகள் செய்துள்ளனர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. விஜய் முதலமைச்சராக இவர்கள் நன்றாக பாடுபடுவார்கள் என்ற கருத்தும் தமிழ் சினிமாவிலும், கட்சி தலைவர்களிடமும் தொடங்கியுள்ளது.
தியேட்டரின் உள்ளே ஒளிபரப்பட்டதால் அங்கு மட்டும் தான் சேதபடுத்தினர். வெளியில் ஒளிபரப்ப காவல் துறை அனுமதிருந்தால் பொதுமக்களுக்கு பல விதத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக துணிவு பட ரிலீஸின் போது வாகனத்தின் மீது ஏறி சேட்டை செய்வது போல் நடத்திருப்பார்கள் அதனால தான் இவர்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவே இதுபோன்ற செயல் செய்ததாக ஒரு சில விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் படம் வெளியாகவில்லை என்ற ரசிகர்கள் இறந்து விடுவார்களா என்ற கருத்தை கேட்டுள்ளனர். இதை விட ஆச்சிரியம் என்னவென்றால் படம் ரிலீஸீன் போது இன்னும் எங்களது அளப்பறையை பார்ப்பீர்கள் என்று ரசிகர்கள் வீடியோ மூலம் ஆதரவை தெரிவிக்கின்றனர்.