24 special

திமுகவை மொத்தமாக கலாய்த்து தள்ளிய சந்தனாம்..! என்னப்பா உதயநிதி நண்பர் இப்படி பண்ணிட்டாரு..?

Udhayanidhi, Santhanam
Udhayanidhi, Santhanam

சினிமா வாழ்க்கையில் முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வந்து சந்தானம் ஒரு படி மேல போய் நடிகராக அவதாரம் எடுத்தார். இதுவரை நகைச்சுவை கலந்த படமாக கொடுத்த சந்தானம் மக்களை ஒரு படத்தை கண்டு முழுமையாக சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் வடக்குபட்டி ராமசாமி படத்துக்காக இணைந்துள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.


உதயநிதிக்கு நெருங்கிய நண்பர்கள் வரிசையில் சந்தனமும் ஒருவர் சந்தானம் மூலமே உதயநிதி மக்களுக்கு அறிமுகமானார். டிக்கிலோனா படத்தை தொடர்ந்து கவுண்டமணியின் பிரபல காமெடியை நியாபகப்படுத்தும் விதமாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர். நகைச்சுவையும் மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் நடைபெற்று வந்தது. இந்த படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இத்திரைப்படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ, ஈவெ ராமசாமியை கிண்டல் அடிக்கும் வகையில் இருந்தது. இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டுட் திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்கட் சந்தானமே, பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூரத்தை காட்டி உள்ளார். 

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், திமுக மற்றும் பெரியார் இயக்கத்தினர் சந்தானத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இணையத்தில் இந்த பதிவிற்கு கடும் விமர்சனம் வந்ததை அடுத்து, இந்த பதிவை சந்தானம் டெலிட் செய்துள்ளார். அவர் அந்த பதிவினை நீக்கிவிட்டாலும், அதன் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் பிடிஆர் பழனிவேல் ராஜன் சந்தானம் குறித்துத் பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி உள்ளார். அதில், அவர் ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக நான் பார்க்கிறேன். அவர்கள் மத நல்லிணக்கத்தை உடைத்துத் சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்திகள் என்று பேசி உள்ளார்.இந்த வீடியோ திமுக கொள்கைகளை பின்பற்றுவருக்கு நெத்தியடியாக மாறியுள்ளது. 

என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சமயம் பார்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார் சந்தானம் என்று நெட்டிசன்கள் மேலும் கலாய்த்து வருகின்றனர். ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் உதயநிதி உடன் னைப்பி தொடடங்கினார் சந்தானம். இந்த ராமசாமி படத்தை உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமே வாங்கி வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.