![mk stalin, sukriya saagu](https://www.tnnews24air.com/storage/gallery/sk1xpToiueVrk9MDkZI6EsBqkE9Bt7ihnh4e2Ytz.jpg)
நேற்று தமிழக அரசு சார்பில் ஒரு அரசாணை வெளியானது அதில் கடலில் நதிகள் சென்று சேரும் இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதற்கான தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் கடலோர பகுதிகளின் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் 1675 கோடி செலவில் தமிழ்நாட்டின் நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் சூழல் காலநிலை மாற்றம் குறித்து வனத்துறை செயலாளர் சுக்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது சுற்றுச்சூழல் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்று சூழலும் கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வரும் கனகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் கடல் அரிப்பை தடுக்கவும், கடலில் மாசுபாட்டை குறைக்கவும், கடலில் உயிரியல் பண்முக தன்மையை பாதுகாக்கும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்தை 2000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு செயல்படுத்த உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ஏனென்றால் கடந்த வாரத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு நேர்காணலில் சுப்ரியா சாகு குறித்து குறிப்பிட்டிருந்தார். இந்த சுப்ரியா சாகு என்பவர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு செய்யும் விஷயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் நடக்கக்கூடிய விஷயங்கள் விஷயங்களை குறித்து இவர் சில விஷயங்களை பகிர்ந்தார். அதில், தமிழக அரசுக்கு அதிக நிதி சுமை இருக்கிறது, இந்த நிலையில் அதிகாரிகள் தங்களுக்கு இருக்கக்கூடிய அதிகார பலத்தை வைத்துக்கொண்டு முதல்வரிடம் எப்படியாவது அனுமதியை வாங்கி விடுகிறார்கள். இது மட்டுமல்லாமல் முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை? ஏதாவது அதிகாரிகள் காசு அடிக்க வேண்டும் என்பதற்காகவே புது புது திட்டங்களை போடுகிறார்கள். அரசு ஊழியர்கள் குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை ஆனால் இப்படி புது புது திட்டங்கள் போடுவதற்கு மட்டும் பணம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இவர் கேள்வி எழுப்பும் சமயத்திலேயே சுப்ரியா சாகு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது, அரசு இயந்திரம் மிகவும் பலவீனமடைந்துள்ளது என அரசியல் விமர்சனங்களை குறித்து விமர்சன அரசியல் விமர்சகர்கள் எழுப்பி உள்ள நிலையில் இப்படி 2000 கோடி ரூபாய்க்கு புது திட்டம் வந்துள்ளது குறித்து மேலும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிட்டுள்ளது.மேலும் இப்படி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்ற தொழிற்சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், அரசு அலுவலர்கள் போன்றவர்கள் போராடும் வேலைகள் தன் துறைக்கு மட்டும் 2000 கோடி ரூபாய்க்கு எப்படி நிதியை வாங்கி புது திட்டத்தை செயல்படுத்த அனுமதி கிடைத்தது என ஒரு கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வரும் திமுக அரசு நிர்வாகிகளையும், அரசு அலுவலர்களையும் சரி செய்யவில்லை என்றால் மேலும் பல பின்னடைவுகளை சந்திக்கும் என ஏற்கனவே பல அரசியல் விமர்சனங்கள் கூறி வரும் சூழலில் இப்படி அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை தவிக்க விட்டு வைத்து 2000 கோடி ரூபாய்க்கு புது திட்டம் தேவையா என விமர்சனம் எழுந்துள்ளது குறித்து முதல்வரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதுவரை பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.