24 special

செந்தில்பாலாஜிக்கு அமலாக்கதுறை வைத்த செக்...! இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

Senthilbalaji
Senthilbalaji

செந்தில் பாலாஜி வழக்கில் இறங்குகிறது அமலாக்கத்துறை 2015 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு பண மோசடிகளில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார் வந்ததால் 2015ல் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டது, அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஓட்டுனர் நடத்தினர் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன் ஜாமின் பெற்றிருந்தார். மேலும் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததன் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறையும் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 

இந்த மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை சார்பாக தொடரப்பட்ட வழக்கு இறுதி கட்ட விசாரணையை முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது அதன்படி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இப்படி மாறி மாறி வழக்குகள் தொடரப்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஒரு முடிவு ஒன்றை கொடுத்துள்ளது உச்சநீதி மன்றம். அதாவது சென்னை ஹைகோர்ட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை  விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கைப் பற்றி முழுமையாக ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும் மேலும் இந்த விசாரணையில் சிறப்பு விசாரணை குழு தேவை என்றால் குழுக்களை அமைத்து விசாரிக்கலாம் அதோடு இந்த வழக்கை பற்றிய முழு விவரங்களின் இரண்டு மாதத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை ஹைகோர்ட் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். 

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பற்றிய முழு அறிக்கையும் அமலாக்கத்துறை விசாரணையை துவங்கவிருக்கும் நிலையில் நேற்று காலையில் லைக்கா நிறுவனத்தில் தனது அதிரடி சோதனையை நடத்திய  அமலாக்கத்துறை கடந்த வாரத்தில் லாட்டரி அதிபர்  சாண்டியாகோ  மார்ட்டின் வீடு மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தி  பல கோடி மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த மாதத்திலே 2 முறை அமலாக்க துறையின் அதிரடி ரெய்டு நடத்தியுள்ள நிலையில் தற்போது அமலாக்க துறையின் பார்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பக்கம் திரும்பி உள்ளது. 

இது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் அமலாக்கத்துறை தலையிட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் போராடி வந்தார். தற்போது செந்தில் பாலாஜியின் விருப்பத்தையும் மீறி அரசியல் தலையீடுகளையும் மீறி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கவுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினரை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.