மூடு டாஸ்மாக்கை மூடு என பாடல் பாடி கடந்த ஆட்சியில் மது ஒழிப்பு போராளியாக தன்னை அடையாள படுத்தி கொண்ட கோவன் தற்போது திமுக ஆட்சியில் கள்ள சாராயம் மரணம் நடந்து இருக்கிறதே என பிரபல ஊடகம் கேள்வி எழுப்ப அதற்கு அவர் கொடுத்த பதிலும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த சம்பவமும் தற்போது கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
மதுவை விட மதத்தை ஒழிப்பதுதான் இப்போது தனது தேவை என அப்படியே பல்டி அடித்து இருக்கிறார் கோவன்... கோவன் பல்டி அடித்ததோடு நில்லாமல் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது தான் இன்னும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கோவன் தனியார் ஊடகத்தில் தெரிவித்ததாவது.., கள்ளச்சாரயத்தால் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காவல்துறையினர்தான் பொறுப்பேற்கவேண்டும். முழுத்தவறும் அவர்கள் மீதுதான் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை முன்னரே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காததால்தான் இத்தனை பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இதில், எப்படி தமிழக அரசையும் முதல்வர் மு.க ஸ்டாலினையும் குறைசொல்ல முடியும்? அவரின் விருப்பப்படியா கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்? அதனால், இப்பிரச்சனையில் முதல்வரை குறைசொல்லக்கூடாது என்று கூறிய கோவன்.
சமீபத்தில்கூட, 2000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அப்படித்தான், இப்போதும் உயிரிழப்பு ஏற்பட்டவுடன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார். அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கையும் எடுத்துள்ளார். அதனால், அரசு இந்தப் பிரச்னையை சரியாகக் கையாள்கிறது முதல்வர் ஸ்டாலின் மிகவும் சரியாக செயல்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ள கோவன்.
அதிகாரிகள் மீதும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதை செய்துவிட்டார்கள். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராடுவோம். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கக்கூடாது. வருமுன் காப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறோம். மதுவைவிட பெரிய போதை மதம்தான். அதையே பெரிய ஆபத்தாகப் பார்க்கிறோம். மது போதையில் இருப்பவரைக்கூட மீட்டுவிடலாம் எனவே மதம் சார்ந்து சமூக விதைகளை தூவ போகிறோம் என குறிப்பிட்டுள்ளார் கோவன்.
கோவன் மீது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி தனது இடத்தை கையக படுத்தி ஏமாற்றிவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நீதிமன்றம் வரை சென்று இருப்பதால் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து கோவன் பாட்டு பாடினால் கோவனின் கோவணம் அவிழ்ந்து விடும் என கோவன் வரிகளில் இருந்தே பொதுமக்கள் பதிலடி கொடுத்து இருக்கின்றனர்.
மதுவை ஒழித்தால் மட்டுமே தீர்வு என மூடு டாஸ்மாக்கை மூடு என பாடல் பாடிய கோவன் இப்போது மதுவை காட்டிலும் மதத்தை ஒழிப்பதே தீர்வு என பல்டி அடித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் கோவன் போன்றோரின் உண்மை முகம் வெளிப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.