பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் பகிர்ந்த தகவல் இணையத்தில் மிக பெரிய வைரலாக பரவி வருகிறது, அதிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் இந்த நாளில் அதனை மையப்படுத்தி கருத்தினை பகிர்ந்துள்ளார் அவர் பகிர்ந்த தகவல் பின்வருமாறு :-
செஸ்♟️ விளையாட்டிலும் நிறவெறி⬜⬛இந்தத் தலைப்பை கேட்டதும் பலர் ஆச்சரியப்படலாம் ஆனால் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கும் இத்தருணத்தில் இந்த உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
16ஆம் நூற்றாண்டுக்கு பின் குறிப்பாக ஐரோப்பியர்கள் எழுச்சி பெற்ற பின்....உலக அரசியலும், பொருளாதாரமும் ராணுவ வலிமையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பெற்றுவிட்ட ஐரோப்பியர்கள் மற்ற இனங்களைத் தாழ்வாக நினைத்தார்கள்....!
குறிப்பாக அவர்கள் வெள்ளையர்கள் என்பதால் "கருப்பு நிறத்தை" தாழ்வாக நினைத்து அவமானம் செய்தார்கள்.... எதுவெல்லாம் சரியில்லாததோ அவற்றையெல்லாம் கருப்பு நிறத்தோடு தொடர்புபடுத்த துவங்கினார்கள்!!!!!
சான்றாக;பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டால் அதை "கருப்பு வெள்ளி" (Black Friday) என்று குறிப்பிட்டார்கள், ஒரு துயரமான நாள் என்று சொல்வதற்கு "கருப்பு நாள்" (Black Day) என்று சொன்னார்கள்,சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் வர்த்தகத்திற்கு "கருப்பு சந்தை" (Black Market) என்று சொன்னார்கள்.
முறையாக வரி செலுத்தாத பணத்தை "கருப்பு பணம்" (Black Money) என்று சொன்னார்கள், ஒருவரை வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவிப்பதை "கருப்பு கொடி" (Black Flag) காட்டுவதாகத் தான் நாம் புரிந்து கொள்கிறோம்
கேரம் போர்டு விளையாடும் போது கருப்பு காயனுக்கு 5 மதிப்பெண்கள் ஆனால் வெள்ளைக்கு 10 மதிப்பெண்கள்!!! கருப்பை விட வெள்ளை உயர்ந்தது என்கிற எண்ணம் பதிய வைக்கப்படும் விளையாட்டுக்கள்
, அதைப்போலவே செஸ் விளையாட்டிலும் ஆட்டத்தை துவக்கும் போது எந்த அணி வேண்டுமானாலும் துவக்கலாம்.. ஆனால் முதலில் நகர்வது வெள்ளை தான்.....ஆங்கிலத்தில் இதை "ஃபர்ஸ்ட் மூவர் அட்வான்டேஜ்" (First Mover Advantage) என்று சொல்வார்கள்......!
இப்போது புரிந்திருக்கும் ஏன் ஆப்பிரிக்காவில் நிறவெறி தலை விரித்து ஆடியது என்று.....!!!இதற்கு நேர் மாறாக இந்திய மரபுகளில் கருப்பு நிறத்தை நாம் கொண்டாடுகிறோம்
நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு கருப்பு ஆடை சாத்துகிறோம்,கிராமங்களில் காவல் தெய்வமாக கருப்பசாமியைக் கொண்டாடுகிறோம்"வந்தே மாதரம்" பாடலில் இந்த தேசத்தை "ஷ்யாமளா" என்று வர்ணிக்கின்றோம் சியாமளா என்றால் கரிய நிறத்தவள் அல்லது கருப்பாயி என்று பொருள்
கிருஷ்ணன் நாம் வழிபடும் கடவுள், கிருஷ்ணன் என்றால் "கரிய நிறத்தவன்" என்று பொருள், வைரமுத்து ஐரோப்பாவில் பிறந்திருந்தால் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்று பாடல் எழுதி இருக்க முடியாது
இயேசு கிறிஸ்து வெள்ளை நிறத்தவராக தான் இருக்க முடியுமா..... நான் அவரை கருப்பாக காட்டுவேன் என்று இயேசு கிறிஸ்துவை கருப்பராக படம் வரைந்த ஒரு பெண் ஓவியர் கொல்லப்பட்டார் என்பது வரலாறு
இந்தியாவில் சாதி ரீதியான ஆதிக்க மனப்பான்மையை விமர்சனம் செய்பவர்கள்..... ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,சாதி ஆதிக்கத்திற்கு முழுமையாக முடிவு கட்ட முடியும்! சாதிகளே இல்லாத நிலை ஒன்றை உருவாக்க முடியும்!
ஆனால் நிற ஆதிக்கத்திற்கு எப்படி முடிவு கட்டுவீர்கள், உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைவேறி குடி கொண்டிருக்கிறது!!!
ஆனால் இந்தியாவின் பகுத்தறிவு முற்போக்குகள்... உடன்பிறப்புகள் இதையெல்லாம் பற்றிப் பேச மாட்டார்கள் காலக்கொடுமை !!அந்த வெள்ளைக்காரன் வளர்த்து விட்ட பிள்ளைகள் தானே இவர்கள்!!
இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்???செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் படத்தில் ஸ்டாலின் வெள்ளை உடை அணிந்து தான் வருகிறார் கருப்பு அல்ல!!!!கிருஷ்ணன் தான் கருப்பனாக இருக்க முடியும் நண்பர்களே கிறிஸ்து இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன்.