24 special

துணைமுதல்வர் கனிமொழி! வெடித்தது பஞ்சாயத்து! உதயநிதி ஓடி ஓடி பார்க்க இதுதான் காரணமா

UDHAYANIDHISTALIN,KANIMOZHI
UDHAYANIDHISTALIN,KANIMOZHI

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்தமிழக அரசியல் கட்சிகள்  அடுத்தடுத்த பல்வேறு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தோல்வி பயத்தால் திமுக தரப்பு  தேர்தல் வேளைகளில் இப்போதே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளது


இதற்கிடையில் திமுகவின் முக்கியமான அதிகார மையங்களில் ஒருவர் சபரீசன் என்றாலும், இதுவரை பொதுவெளியில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பின் இருக்கையில் அமர்ந்தபடியே கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார். கருணாநிதிக்கு மாறன் செயல்பட்டதுபோல, ஸ்டாலினுக்கு சபரீசன் செயல்படுகிறார்; ஆகையால், கட்சியில் அவரை நேரடியாக ஈடுபடுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் ஏற்கெனவே பேசிவருகின்றனர். 

ஆனால், மகன் உதயநிதி, தங்கை கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் என்று மூவர் நேரடியாக கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு வகிக்கும் நிலையில், கூடுதலாக சபரீசனையும் நேரடி அரசியலுக்கு கொண்டுவந்தால்,  கட்சிக்குள்ளே மேலும் பூகம்பம் வெடிக்கும் என கூறியுள்ளார்கள். 

ஆனால் இந்த முறை கனிமொழி தீவிரமாக தமிழக அரசியலில் ஈடுபடவுள்ளார்  இது சபரிசனுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.முதலமைச்சர் குடும்பத்துக்குள்ளேயே புகைந்து வெளிப்பட ஆரம்பித்திருக்கும் பூசல், தி.மு.க-வினரிடையே பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. மேலும் தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் பவர்ஃபுல் நபராக கருணாநிதி அழகிரியை வைத்திருந்தாரோ அதே மாதிரி, தென் மாவட்டத்தின் முகமாக, கனிமொழி இருக்க வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் ஆசைப்பட்டுள்ளாராம். 

இதனை தொடர்ந்து தான் கனிமொழிதுணைப் பொதுச் செயலாளர் ஆனார் . இது தெரிந்தவுடனேயே  கோபாலபுரம் குடும்பத்தில் இருந்தும், சித்தரஞ்சன் சாலை குடும்பத்தில் இருந்தும் முணுமுணுப்பு எழுந்தது.இப்போது எல்லா வகையிலும் உங்களுக்கு அடுத்த நிலையில் உதயநிதியை தயார்படுத்தி வருகிறோம்.  எல்லா விளம்பரத்துலையும் உதயநிதி படம் போடுறாங்க. இப்ப கனிமொழியை  துணைப் பொதுச் செயலாளரா கொண்டு வந்தீங்கன்னா  நாளைக்கு பிரச்சினை வராதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது ஆனால் இது ராஜாதியம்மாள் முடிவு வேறு வழியில்லாமல் பதவியை கொடுத்துளார்கள் என கோபாலபுரம் வட்டாரம்  கூறியுள்ளது.

முதலமைச்சர் குடும்பத்துக்குள்ளேயே புகைந்து வெளிப்பட ஆரம்பித்திருக்கும் பூசல், தி.மு.க-வினரிடையே பெரும் அதிர்வைக் கிளப்பியது சமீபத்தில் நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவிலும் ‘ஆப்சென்ட்’ ஆனார் துணை முதலமைச்சரும், தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார் கனிமொழி அவர்கள்.  மேலும் திமுகவில் எம்பி கனிமொழியின் கை ஓங்கும் வகையில் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . 

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தென் மாவட்டங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட கனிமொழி இப்போதே தயாராகி வருவதாகவும் அதற்கான பணிகளை அவர் துரிதப்படுத்தியிருப்பதாகவும் அவரது தரப்பினர் பேசிவருகின்றனர். 

இதனை தொடர்ந்து சபரீசன் களத்தில் இறங்கினார். கனிமொழி கை ஓங்கினால் சபரீசன் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் என்பதால் தான் உதயநிதியை ஆக்டிவ்மோடிற்கு கொண்டு வந்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும் அதை விளம்பரப்படுத்தி திமுகவின் அடுத்த தலைவர் அடுத்த முதல்வர் உதயநிதி தான் என முத்திரை குத்தும் வேளைகளில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் கனிமொழியும் தமிழக அரசியலில் தன்னுடைய ஆளுமை தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் நிலையில், துணைமுதல்வர் பதவியை பெறவும் அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.