
கிராண்ட் செஸ் டூர் தொடரின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து, கிளட்ச் செஸ் தொடர் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் இத்தொடர் நடக்கிறது.
முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கிளட்ச் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் டாப் 3 இடங்களில் உள்ள மாக்னஸ் கார்ல்சென் ஹிகாரு நகமுரா, பாபியானோ கருனா மற்றும் உலக சாம்பியனான இந்திய வீரர் குகேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 46-வது நகர்த்தலில் நகமுராவை தோற்கடித்தார்.அதற்கு அடுத்து நடந்த நடந்த இந்தியா- அமெரிக்கா இடையிலான போட்டியில் நகமுரா, குகேசை வென்றார். அதனை தொடர்ந்து நகமுரா, குகேசின் ராஜாவை தூக்கி ஏறிந்து வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் கிளட்ச் செஸ் போட்டி ஆட்டத்தில் குகேஷ் ஹிகாரு நகமுராவை பழிதீர்த்து கொண்டார்.நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார்.
தோல்வியில் துவளவும் கூடாது, வெற்றியில் ஆணவம் அடையவும் கூடாது என்ற பாடத்தை நகமுராவுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் குகேஷ். அவரது இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் ஆனால், இம்முறை குகேஷ் வெற்றி பெற்ற பிறகு, பதிலடி கொடுக்கும் வகையில் ஹிகாரு நடந்துகொண்டதைப் போன்று செய்யாமல், தனது சதுரங்க காய்களை அடுக்க ஆரம்பித்து தனது வெற்றியை வெளிப்படுத்தினார்.
வெற்றி பெற்ற பிறகு குகேஷ் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. இதுவே விளையாட்டு வீரனின் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றும், தோல்வி அடைந்தவர்களாக இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் பண்பு இயல்பிலேயே குகேஷிடம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
