தேசிய பங்கு சந்தையில் மோசடி செய்யபட்ட வழக்கில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன இந்த நிலையில் இது குறித்து ஸ்டான்லி ராஜன் தெரிவித்த கருத்தை பார்க்கலாம் :-
தேசிய பங்குசந்தையின் முன்னாள் நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் நேற்று கைது செய்யபட்டிருகின்றார் இவர் ஒரு மர்ம சாமியாரின் சீடரான இவர் அவருக்கு உததவியாக முன் அனுபவமே இல்லா ஆனந்த சுப்பிரமணியம் என்பவரை நியமித்தார் என்பதும் இதனால் பெரும் முறைகேடுகள் நடந்தன என்பதும் குற்றசாட்டு.
சாமியார் தரப்போ அந்த அம்மணி தங்களின் சீடர்களில் ஒருவர் அத்தோடு சரி என்கின்றது, ஆனால் சாமியார் தரப்புக்காகத்தான் ஆனந்த சுப்பிரமணியம் நியமிக்கபட்டார் என்கின்றது சில குற்றசாட்டுக்கள் இந்த மூவரில் ஆனந்த சுப்பிரமணியம் சென்னையில் கைது செய்யபட்டார், மர்ம சாமியாரிடமும் விசாரணை நடக்கின்றது.
இந்நிலையில் இந்த அம்மையாரும் நேற்று கைதுசெய்யபட்டிருக்கின்றார், இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது, தேசிய பங்குசந்தை என்பது இந்திய பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் இடம், அங்கு முறைகேடு என்பது ஏற்றுகொள்ளவே முடியாத விஷயம் என்பதால் அரசு கடுமைகாட்டுகின்றது, சிபிஐ மிக தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றது.
அந்த மர்ம சாமியார் யாரென செய்தி வரவில்லை, தமிழகத்தில் இருந்து கொண்டே யாரும் புகமுடியாத உக்ரைனுக்குள் நுழைபவர்கள், யாருமே செல்லமுடியாத இடத்திலெல்லாம் நுழைந்து சாதிப்பவர்களான தமிழக மீடியாக்களும், யு டியூப்பர்களும் அதை கண்டறிவார்கள் என எதிர்பார்ப்போம்
இதெல்லாம் மோடி அரசின் பலவீனம், சாமியார்களின் சதிராட்டம் என யாராவது கிளம்பினால் அவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ளலாம், இந்த அம்மையார் பதவியில் இருந்தது 2013 முதல் 2016 வரை, ஆம் காங்கிரஸ் ஆட்சியில்தான் அவர் நியமிக்கபட்டார், இப்பொழுது மோடி ஆட்சியில்தான அவரின் முறைகேடுகள் கண்டறியபட்டு சட்டத்தின் முன்னால் நிற்கின்றார்
எது எப்படியாயினும் தகுதியும் திறமையும் இல்லாத ஒருவரை அந்த பெரும் பதவியில் வைக்க பங்குசந்தை அலுவலகம் என்பது தமிழக உள்ளாட்சி பதவிகளா என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பதிவிற்கு கீழே பலரும் அந்த மவுன சாமியார் யார் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்பு குறித்தும் விசாரணை வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சித்ரா கைது செய்யபட்ட நிலையில் சிதம்பரத்திற்கு சிக்கல் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
More watch videos