
உச்சநீதிமன்றம் ஜாமீனா அமைச்சரா என செந்தில் பாலாஜியை கேட்ட போதே அன்று இரவே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஸ்டாலினிடம் அளித்துவிட்டார் செந்தில் பாலாஜி. அப்போதிருந்தே,அவரிடமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மின்சாரத்துறை இலாகாக்களை யாருக்கு மாற்றிக்கொடுப்பது என்கிற விவாதம் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற முதல்வர் முயன்றுகொண்டிருந்தாலும், மறுபுறம் இலாகாவைப் பிரித்துக் கொடுப்பதற்கான ஆலோசனையிலும்இறங்கியுள்ளார். முதலில், மதுவிலக்குத்துறையை திண்டுக்கல் ஐ.பெரியசாமியிடமும், மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிடமும் கூடுதல் பொறுப்பாக அளிக்கவே பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவருமே மறுத்துவிட்டனர்.
டாஸ்மாக்குக்குள் அமலாக்கத் துறையின் விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அந்தத் துறையைப் பெற பெரியசாமி மட்டுமல்ல பல அமைசசர்கள் விரும்பவில்லை. ‘கடைசி காலகட்டத்துல ஏன்ப்பா சர்ச்சையில போய் சிக்கணும்... கொடுத்தா,வேறுதுறையை ஒதுக்குங்க. பார்த்துக்கிறேன்...’ எனத் தன்னிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் அலுவலக அதிகாரிகளிடம் சொல்லிவிட்டார். இந்தத் தகவல் மேலிடத்துக்குத் தெரியப்படுத்தப்படவே, ‘அவருக்கு இப்போதிருக்கும் ஊரக வளர்ச்சித்துறையே போதும்’ எனச் சொல்லிவிட்டது மேலிடம். செந்தில் பாலாஜி சிறையிலிருந்தபோது, மதுவிலக்குத்துறை முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் நிர்வாகத்தை கவனித்த அனுபவம் அவருக்கு ஏற்கெனவே உண்டு என்பதால், முத்துசாமியிடமே கூடுதல் பொறுப்பாக அந்தத் துறையை அளிக்க முடிவானது.
அடுத்ததாக, ‘நான் ஏற்கெனவே மின்சாரத்துறையையும் நிதித்துறையையும் சேர்த்துத்தான் கவனித்துக்கொண்டேன். இரண்டுமே பணிச்சுமை அதிகமுள்ள துறைகள் என்பதால், சரியாக கவனம் செலுத்த முடியாது...’ எனப் பதுங்கினார் தங்கம் தென்னரசு.இதற்கு காரணமும் அமலாக்கத்துறையின் அடுத்த அட்டாகே மின்சாரத்துறை தானம். மேலும் இது கோபாலபுரம் வரை இந்த மின்சார துறை ஊழல் ஷாக் அடிக்கும் என்கிறார்கள். எனவே மிகவும் சைலெண்டாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
மேலும் உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டில், ‘கட்சி சார்ப்பற்ற பொதுமக்களிடம்கூட பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் முகம் சுளிக்கிறார்கள். அவரது பேச்சின் வீடியோவைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகள் திட்டமிட்டிருக் கின்றன. அவர் அமைச்சராகத் தொடர்ந்தால், ஆட்சிக்குக் கெட்ட பெயர்தான் வரும்’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன் பின்னர்தான், அமைச்சரவையிலிருந்து பொன்முடியைக் கழற்றிவிடும் முடிவுக்கு முதல்வரும் வந்தார்.
செந்தில் பாலாஜியிடம் இப்போது இருப்பது கரூர் மாவட்டச் செயலாளர் பதவி மட்டும்தான். பொன்முடியிடம் கட்சிப் பதவிகூட எதுவும் இல்லை. இருவருமே, ‘அடுத்து என்ன செய்வது... எதிர்காலம் என்னவாகும்..?’ என மிரட்சியில்தான் இருக்கிறார்கள். டாஸ்மாக் மீதான விசாரணை ஒருபுறம் வேகமெடுத்திருக்கும் சூழலில், பொன்முடி மீதான அவதூறு வழக்கும் தீவிரமடைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வரிசையாக அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கி வருகிறார்கள்.
ஆறு மாதத்தில் அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது கிட்ட தட்ட 8 அமைச்சர்கள் வழக்குகளை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ‘சட்டச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது, தேர்தல் நெருக்கத்தில் சீனியர் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் தீர்ப்புகள் வெளியானால் அதை எப்படி எதிர்கொள்வது, டெல்லியின் அடுத்த அட்டாக் எங்கே, எப்படியிருக்கும்..?’ எனப் பல கேள்விகள் ஸ்டாலினை சுற்றிச் சுழல்கின்றன. தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க... நெருக்கடிகளும் கூடிக்கொண்டே போகின்றன திமுகவுக்கு முடிவுரை எழுதும் காலம் என்கிறர்கள் அரசியல் நோக்கர்கள். மீண்டும் துரைமுருகன் வீட்டு கதவை தான் தட்ட போகிறதாம் கண்டிப்பாக துரைமுருகன் பதவி ஊசலாடி கொண்டிருக்கிறது. இது அனைத்தும் உதயநிதி தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தனது சகாக்கள் அனைவரையும் அமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் . எது எப்படியோ மீண்டும் திமுக ஆட்சி என்பது வர வாய்ப்பில்லை என சர்வே கூறிவிட்டது.