24 special

கோவை ட்விஸ்ட்... அண்ணாமலை கண்டுபிடிச்சிட்டாரா..? ஆத்திரத்தில் செந்தில் பாலாஜி..!

Annamalai
Annamalai

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து மூன்று நாட்களாக அரசின் தரப்பில் முதலமைச்சரோ, அமைச்சரோ மற்ற அமைச்சர்களோ கோவைக்கு விரையவில்லை. இப்போழுது அண்ணாமலையின் அழுத்தம் மற்றும் பாஜகவின் பந்த் அறிவிப்பு காரணமாகவே திமுக அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது என கொங்கு மண்டலத்தில் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள்.


கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் தங்களது அரசின் மெத்தனப்போக்கை பூசி மெழுகும் வகையில் செயல்பட்டு வருகிறது திமுக அரசு. இந்நிலையில், ’’கோவை விவகாரத்தில் முதலில் அண்ணாமலையை தான் விசாரிக்க வேண்டும்.அவருக்கு எப்படி எல்லாம் தெரிகிறது’’ என மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளது எதிர்கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆற அமர என்.ஐ.ஏ விசாரணைக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் அனுமதி அளித்திருப்பதும் விமர்சனத்தைக் கிளப்பி இருக்கிறது.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது முதலே பாஜக இதனை பயங்கரவாத தாக்குதல் என்று சொல்லிவருகிறது.ஆனால், போலீஸார் சிலிண்டர் விபத்து என்றே கூறி வந்தனர். பின்னர் பாஜக ஒருபடி மேலே சென்று இது தற்கொலைப் படை தாக்குதல் என்றது. இதுகுறித்து பேட்டியளித்த அண்ணாமலை, ‘ நாங்கள் இதற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளோம். உயிரிழந்த ஜமீஷா முபின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த மெசேஜை சுட்டிக் காட்டினோம். அது ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் பயங்கரவாதிகள் வழக்கமாக பயன்படுத்தும் வாக்கியம் என்பதை சுட்டிக் காட்டினோம்.

சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் இந்த மெசேஜை வைத்துள்ளார். தமிழகத்தில் மிக மோசமான பாதுகாப்பு அரணை வைத்திருப்பதற்காக முதல்வரே பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறுபான்மையினரை எப்போதும் சரிகட்டும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது. அண்மையில் கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. அவற்றிற்கு பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா தான் காரணம் என்றோம். அதையும் புறந்தள்ளினர். அதை திமுக அமைச்சர்கள் சிலரின் பேச்சு கேலிக் கூத்தாக இருந்தது.

பாஜகவே இந்த சம்பவங்களை அரங்கேற்றின என்று கூறினர். இன்னொரு அமைச்சர், அண்ணாமலை தான் எல்லாம் செய்கிறார் என்றார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் தான் இருக்கிறது.

இந்து குறித்த தகவல்கள் எல்லாமே நிச்சயமாக காவல்துறையினரால் பகிரப்பட்டது தான். காவல்துறையில் உள்ள நேர்மையான சில அதிகாரிகள் கொடுத்த ஆதாரங்களைத் தான் நாங்கள் வெளியிட்டோம். அவர்களில் சிலரே எங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தயவு செய்து நீங்களாவது இவற்றை வெளிக்கொண்டு வாருங்கள். எங்கள் வாயடைத்துவிட்டார்கள் என்றார்கள். வாக்களித்த மக்கள் திமுக அரசை மன்னிக்கமாட்டார்கள்.

இவர்கள் சிறுபான்மையினரை என்னதான் தாங்கினாலும் கூட அவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். இங்கு யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தீவிரவாத செயல்களைச் செய்பவர்கள் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ இருக்க முடியாது. யாரோ சில அடிப்படைவாதிகள் செய்வதே தீவிரவாதம்’’என கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆளும் திமுக மீது பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூறுகையில் , ’இந்த சம்பவம் தொடர்பாக கட்சி மட்டும் இதில் புகார் வைத்து வருகிறது. மட்டகரமான அரசியலை இதில் சிலர் செய்து வருகிறார்கள். எப்படியாவது இதை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் செயல்படுகிறார்கள். எங்காவது இந்த சம்பவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? சொல்லுங்கள்? அண்ணாமலை யாராவது ஏதாவது பேசுவார்கள்.

தீபாவளி இதன் காரணமாக பாதிக்கப்பட்டதா? எத்தனை தீவிரவாத தாக்குதலில் "அந்த" கட்சியை சார்ந்தவர்கள் வாய் திறந்தார்கள். அங்கே அவர்கள் எங்கே போனார்கள். மதுரையில் ராணுவ வீரரின் மரணத்தை வைத்து அரசியல் செய்தார்களே அவர்கள் யார்? அப்போது அவருடைய ஆடியோ வெளியானதே? அவர்கள் எல்லாம் இதை பற்றி பேசலாமா? இவர்கள் ஏன் இப்போது பந்த் நடத்த நினைக்கிறார்கள். இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்களா? காருக்குள் குண்டு இருந்தது என்று கூறுகிறார்கள்.

காருக்குள் சிலிண்டர் இருந்தது. பால் ரஸ், ஆணிகள் தனி தனியாக இருந்தன. இவர்கள் குண்டை உருவாக்கிவிட்டு அதை கொண்டு செல்லவில்லை. அதனால் சிலிண்டர் வெடிப்பு என்றுதான் இதை கூற முடியும். அந்த கட்சி ஏற்கனவே இதில் விசாரணையை சிறப்பாக செய்துஇருக்கிறோம். அந்த கட்சி இதை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியாதா என்று பார்க்கிறார். என்னுடன் வாருங்கள் வந்து பாருங்கள் வேண்டுமென்றால்.

எங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுங்கள். நான் மற்றவர்களை மாதிரி சம்பவம் நடந்ததும், உடனே செய்தியாளர்களை சந்தித்து பொய்யாக பேச முடியாது. நான் யூகத்தின் அடிப்படையில் பேச முடியாது. கோவையில் அமைதி நிலவுகிறது. பந்த் என்ற முறையில் இவர்கள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.

கோவை அரசியலை, சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வரும் பாஜகவை சேர்ந்த முன்னணி நிர்வாகி இதுகுறித்து, ‘முழுமையாக இன்னமும் "திராவிடியன்" நாடகம் பலருக்கும் புரியவில்லை. 

இதுபோன்ற உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் ஆளுகின்ற திமுக அரசு இவ்வளவு மோசமாக செயல்பட்டிருக்கவே கூடாது. ஆளுகின்ற திமுக, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை குறிவைத்து நடவடிக்கையை தாமதப்படுத்தியுள்ளது. கோவையில் ஏற்கனவே இவர்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களின் நினைவுகள் அழியும் முன்பே இவர்கள் மீண்டும் இப்படி ஒரு கொடூர எண்ணத்தை கைவிடவே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

கோவையில் எவ்வளவு பொதுமக்களும், அப்பாவிகளும், குழந்தைகளும், பெரியவர்களுமாய் இந்த தீவிரத்தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்களோ தெரியாது. திமுகவுக்காக வாயை வாடகைக்கு விடுகின்ற கும்பல்களும் கட்சிகளும் இந்த தீவிரவாதிகள் விஷயத்தில் மொத்தமாக அமைதி காப்பது கூட, இவர்கள் மூலம் சிலர் தப்பித்திருக்க கூடும் என்கிற பொதுமக்களின் கருத்தினை அவ்வளவு சுலபமாக தள்ளிவிட முடியாது. 

வேறு நாடுகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருந்தால் இந்நேரம் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பார்கள். ஓட்டுக்களை விட தேசத்தின் நலன்தான் முக்கியம் என்கிற எண்ணத்தை தன்னுள் வளர்க்க தவறிவிட்டார்கள். பாவம் இந்த அப்பாவிய இஸ்லாமிய மக்கள்.

ஏற்கனவே இவர்களுக்கு வீடுகள் வாடகைக்கு கொடுக்க மறுத்து வருகின்ற நிலையில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற அரங்கேற இந்த ஏழை அப்பாவி  ஜனங்களின் நிலைமை மிகவும் பரிதாபமே. திமுக ஆதரவு கைக்கூலிகள் மூலம் இந்த வழக்கே திசைமாறி போயிருக்கும்.தீவிரவாதிக்கு சிலை வைக்க கூட முயன்று இருப்பார்கள்.1998 தொடர் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் கோவையில் தொழில் முடக்கம் ஏற்பட்டது.

மீண்டும் அதே நிலை ஏற்பட்டால் கோவை வாழ்வதற்குரிய இடமாக கூட இருக்காது.அண்ணாமலை தனக்கு தெரிந்த தவல்களை கூறியிருப்பதால் அவர் மீது விசாரணை நடத்த வேண்டு என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது உச்சகட்ட வெறுப்பு அரசியல்.கோவை என்ன தீவிரவாதிகளின் புகலிடமா?’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.