இந்திய ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள ஐடியா விசிக தலைவர் திருமாவளவனுக்கு திகிலை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், ‘’நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேசினார்.அப்போது, ‘’நாட்டிற்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவை.இந்திய ரூபாய் நோட்டுகளில், மகாத்மா காந்தியுடன் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும்.
நமது புதிய ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படத்துடன் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படத்தை வைக்க மத்திய அரசு மற்றும் பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இருந்தால், முழு நாட்டுக்கும் கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பழைய நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று தான் பரிந்துரைக்கவில்லை. இந்தோனேசியா ஒரு முஸ்லீம் நாடு, அந்நாட்டின் மக்கள்தொகையில் 85% முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
அங்கு இந்துக்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள்த்தொகையில் 2% மட்டுமே என்றாலும், அவர்களின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் உள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்."ரூபாய் நோட்டில், லட்சுமி தேவியும், விக்ன விநாயகரும் இடம் பெருவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று நான் கூறவில்லை, அதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும், ஆனால் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே முயற்சிகள் பலனளிக்கும்.தீபாவளி பூஜை செய்யும் போது தான்,எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. இந்த எண்னத்தை எதிர்க்க வேண்டாம். நாட்டின் செழிப்புக்காகவாவது இந்த கருத்தை எதிர்க்க வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்காத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு அடுத்த நொடியே பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.எங்கும் சனாதனம் மற்றும் சிறுபான்மையினர் நலன் என்றே பேசிக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். இந்து மத நம்பிக்கைகளுக்கும் எதிராக செயல்படும் அவர், தான் ஒரு இந்து இல்லை என்று எந்த இடத்திலும் மறுத்ததில்லை.
சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்தே இந்து மத நம்பிக்கைகளையும் இந்து மத பெண்களையும் இழிவாக பேசி வருபவர். கோயில் சிலைகளை அசிங்கப்படுத்துபவர். திருமாவளவன் எப்பொழுதும் சனாதனம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கையை பற்றி பேசுபவராக இருப்பினும் தனக்கென்று வந்துவிட்டால் மட்டும் அவருடைய கொள்கை அனைத்தும் காற்றில் பறக்க விடப்படும். ஊருக்காக கடவுள் மறுப்பாளராக தன்னை வெளி காட்டிக் கொள்ளும் இவர் தன்னுடைய பல சொந்த விஷயங்களில் இந்து மதக் கொள்கையை பின்பற்றுவது உலகறிந்ததே.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாயில் கடவுள் படங்கள் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதற்கு திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ’’அரவ் இந்து கெஜ்ரிவால் ரூபாய் தாள்களில் விநாயகர் லட்சுமி உருவங்களை அச்சிட சொல்வது குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங்பரிவார்கள் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங்பரிவார்களை தணிக்கும் தன்னல சூழ்ச்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
’’ இந்து அப்பாவி மக்களிளை ஏமாற்றும் சூதாட்டமா?’’ என அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டு இருக்கிறார் திருமாவளவன். இந்துக்களுக்காக அவர் பரிதவிப்பது தான் நாடகம். இந்து மத நம்பிக்கைகளை, தெய்வங்களை, வழிபாட்டு முறைகளை, சின்னங்களை இழிவாக பேசித்திரியும் திருமாவளவனுக்கு இந்து மக்களை சிலர் ஓட்டுக்காகவே ஏமாற்றுவதாக இருந்தாலும் அவர்கள் மீது திருமாவளவனனுக்கு என்ன திடீர் கரிசனமோ’’ எனக் கேள்வி எழுப்பிகின்றனர் தமிழகத்தை சேர்ந்த ஆத்மி கட்சியினர்.