2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்த பணிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டு வருகிறது இதில் எந்த ஒரு கட்சியும் இல்லாத ஒரு பிரச்சனையில் திமுக சிக்கி தவித்து வருகிறது, அதாவது திமுகவின் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையும் சச்சரவுகளும் தொடர் சண்டைகளும் இருந்து வருவது திமுகவின் தேர்தல் பணிகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது முன்னதாக திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுகவின் கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது அதில் 51 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுமே கவுன்சிலர்களாக உள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே மேயர் சரவணனுக்கும் அவருக்கு மேயர் பதவி கிடைக்க முக்கிய காரணமாக இருந்த அப்துல் வஹ்ஹாப் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இரண்டு தரப்பினருக்கும் இடையே பனிபோர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திருநெல்வேலி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகளும் மக்களும் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பிலிருந்து போட்டி போட்டு தனக்குள்ளேயே ஊழல் குற்றச்சாட்டுகளை மாறி மாறி முன் வைத்துக் கொண்டனர் இந்த நிலையில் திமுக தலைமையில் இருந்து இந்த சண்டையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது ஆனால் அவை அனைத்தும் சரிவராமல் போக 38 திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற மனுவை ஆணையரிடம் அளித்தனர். இதுவரை எந்த ஒரு கட்சியிலும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாது திமுகவில் அதுவும் ஆளுங்க கட்சியில் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அறிவாலயத்திற்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தர்மபுரி திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் அம்மாவட்டத்தின் எம்பி ஆக உள்ள செந்தில்குமார் மீண்டும் இதே தொகுதியில் எம்பி தேர்தலில் நிற்கக்கூடாது வேறு மூத்த திமுக நிர்வாகிக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கான திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி வருகிறது அந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனைகளையும் கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் ஏற்று வருகிறார்.
அதன்படி தர்மபுரி நிர்வாகிகளுக்கான திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தர்மபுரியை சேர்ந்த திமுக நிர்வாகிகளே தர்மபுரியில் மீண்டும் எம்பி வேட்பாளராக செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது மாறாக சீனியர் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர் அந்த கோரிக்கையும் உதயநிதி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,. மதுரை திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மதுரையை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் அதில் ஒரு கோரிக்கையாக தற்போது இருக்கும் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி சு.வெங்கடேசனின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்றும் மதுரை மாவட்ட எம்பியான வெங்கடேசன் மீது திமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும் அதனை உதயநிதியிடம் கொண்டு சென்ற சமயம் அதனை ஏற்று நிர்வாகிகளின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என்றும் உதயநிதி கூறி உள்ளாராம். இப்படி தேர்தலுக்கு ஆயுத்தமாகும் வேளையில் தொடர்ச்சியாக திமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதே பகுதியைச் சேர்ந்த எம் பி கள் மீது தொடர்ந்த அதிருப்தி தெரிவித்து வருவது அறிவாலயம் தரப்பை தலை சுற்ற வைத்துள்ளது.