பல ஆண்டுகளாக இந்து மக்களின் ஒரு கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வந்த ராமர் கோவில் தற்போது அயோத்தியில் நிறுவப்பட்டு மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இப்படி ஒரு வரலாற்று நிகழ்வு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று பலர் பெருமிதத்திலும் உற்சாகத்திலும் சிலிர்த்து ராமரை பார்ப்பதற்கு அயோத்திக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பொதுமக்களின் தரிசனத்திற்கு அயோத்தி ராமர் கோவில் திறந்துவிடப்பட்ட ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் அயோத்தி பால ராமரை தரிசித்துள்ளதாகவும் காலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை நடைதிறக்கப்பட்டு இருந்தபோதிலும் கோவிலில் வளாகத்தில் கூட்டம் அலைமோதி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரதிஷ்டை விழாவின்போது கலந்து கொள்வதற்கு பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது அதில் பலரால் கலந்து கொள்ள முடியவில்லை சில நேரடியாகவே மறுத்திருந்தனர்.
இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தற்பொழுது ராமரை பார்ப்பதற்கு படை எடுத்து வருகின்றனர் முன்னதாக கும்பாபிஷேக விழாவில் பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு கூட அழைப்பிதழ்கள் வழங்கப்படாமல் எதிர்க்கட்சியை தரப்பினர் பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சியின இதனை கும்பாபிஷேக விழாவை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது மேலும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ராமரை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர் இந்த நேரத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் யாரும் அயோத்தி கோவிலுக்கு செல்ல வேண்டாம் முதலில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி நாளுக்கு நாள் ராமர் கோவிலில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருவது இடதுசாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் இடதுசாரிகள் பலவாறு இணையங்களில் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். திமுகவின் பெண் பேச்சாளர் ஒருவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பெண்களோடு அந்தப்புரத்தில் இருந்தவன் ராமன்! வாழ்வதற்கு வக்கில்லாமல் தனது படைபலத்தோடு குடும்பத்தோடு சரயு நதியில் விழுந்து செத்துப் போனவன் ராமன் அவனையா உங்கள் குழந்தைக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூற போகிறீர்கள் என ராமனை தவறாக சித்தரிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் திமுக ஆதரவு பேச்சாளர் சுகி சிவத்தை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் ராமரைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அந்த இளைஞன் பேசும்போது, 'எடுத்தது கண்டனம் இட்டது கேட்டான் என்ற திறமா! அண்ணனும் நோக்கினால் அவளும் நோக்கினான் என்ற காதல் உணர்வா! பகையை முடித்த போர் திறனா! எது காரணம் அப்பாவிற்கு 60 ஆயிரம் மனைவிகள் இருந்த போதிலும் அந்தப்புரம் எந்த புறம் என்றே தெரியாமல் வாழ்ந்தது தான் ராமனின் தனிப்பெரும் சிறப்பு, அவன் தந்தை சொல் கேட்ட தணையன் தம்பிகளை வழி நடத்தி நல்ல தமையன் ஒரு இல் ஒரு வில் ஒரு சொல் என பாடறிந்து ஒழுகியதால் அவன் பண்பாட்டு நாயகன்' என்று ராமனை குறித்து அந்த இளைஞன் புகழ்ந்து பேசினான். இந்த நிகழ்ச்சியில் சுகிசிவம் கலந்து கொண்டிருந்தார் அந்த இளைஞன் ராமனைக் குறித்து புகழ்ந்து பேச பேச சுகிசிவத்தின் முகம் மாறிக்கொண்டே இருந்ததை சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள வீடியோவிலும் காண முடிகிறது! இப்படி இடதுசாரிகளால் ராமன் குறித்தும் ராமர் கோவில் குறித்தும் அவதூறுகள் பரப்பப்படும் நிலையில் ராமரின் நிலையிலும் ராமரை புகழ்ந்து பேசும் நிலையும் வலுப்பெற்று வருவது இடதுசாரிகளை எரிய வைத்துள்ளது.