24 special

மோடி சொன்ன ஒற்றை வார்த்தை ஓடி வந்த உலக நாடுகள் அமெரிக்காவை அலறவிட்ட மெகா லிஸ்ட்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பைத் தொடா்ந்து இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகளிடையே நடைபெற்று வந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் நின்றது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீது மிக அதிக வரியை விதிப்பதாகவும், ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகவும் இந்தியா மீது தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்த, அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந் நாட்டின் அதிகாரிகளும், ‘இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு முக்கியம்’ என்று பின்னா் தெரிவித்தனா். இந்த நிலையில், இரு நடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தான் , கடந்த ஆகஸ்ட் மாதம் ஆா்மீமனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உள்ளடக்கிய யூரேசியா பொருளாதார கூட்டமைப்பு (இஏஇயு) மற்றும் ரஷியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைங்களை இந்தியா மேற்கொண்டது இது அமெரிக்காவுக்கு பெரும் இடியை இறக்கியது. மேலும் தற்போது ஐநா கூட்டத்திற்கு சென்றுள்ள இந்தியா ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி உள்ளநட்ட நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை பேசிவருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமுடன் உள்ளன.  

மேலும் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.  இதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றிருந்த போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா,நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது.ன் அதேபோல் கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது

தடையற்ற வர்த்தகம் மூலம் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் மற்ற மருத்துவ சாதனங்கள், விமான உதிரி பாகங்கள் ஆகியவற்றை பெற முடியும். குறைந்த விலையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும்.

மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கிடையேயான சரக்குகள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும். 

இதன் விளைவாக, இறக்குமதிச் செலவுகள் குறையும், ஏற்றுமதிகள் அதிகரிக்கும், சர்வதேச சந்தைகளில் போட்டித்திறன் மேம்படும், மற்றும் இருவழி முதலீடு அதிகரிக்கும். இந்த ஒப்பந்தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு, முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன

வர்த்தக வரிகளை நீக்குவதன் மூலம், பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியப் பொருட்கள் போட்டித்தன்மையுடன் இருக்கும், இது ஏற்றுமதியை அதிகரிக்கும். : ஒப்பந்தங்கள் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, சர்வதேச சந்தைகளில் வணிகங்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. வர்த்தக தடைகள் நீங்குவதால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கிறதுதடையற்ற வர்த்தகத்தை உருவாக்குவதன் மூலம், உலக வர்த்தக அமைப்பு உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்க முடியும்.