24 special

திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கிட்னிகள் உள்ளே வரும் சிபிஐ இனி தான் இருக்கு கச்சேரி

CBI,MKSTALIN
CBI,MKSTALIN

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.


இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. அதுதான், இந்த கிட்னி திருட்டு விவகாரத்தை மேலும் சூடாக்கியிருக்கிறது!

“கிட்னி திருட்டு நடந்திருப்பதை வினீத் ஐ.ஏ.எஸ் குழு உறுதிசெய்திருக்கும் நிலையில், மேற்கொண்டு கடும் நடவடிக்கையைத் தமிழக அரசுதான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை வெளிக்கொண்டுவர நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே, யாரையோ அவர்கள் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்த விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகங்களைக் கிளப்புகின்றன...” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எனது கிட்னிக்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லிவிட்டு, 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்...’ என்று பேசிய வீடியோ வைரலானது. பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதே போன்ற குற்றச்சாட்டுகள் வெடித்தன. 

பெண்கள் பலரும்,  புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலமாக கிட்னிகளை விற்றோம். அதற்காக, 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். எங்களில் சிலருடைய கணவன்மார்களும் கிட்னியை விற்றிருக்கிறார்கள்என கூறியுள்ளார்கள். .இதனை தொடர்ந்து ஆனந்தன் மீது  அபுகார் அளிக்கட்டப்பட்டுளது. புகாரளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும்கூட, இதுவரை போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவில்லை என்பதும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும்தான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கின்றன.

இதற்கிடையில் ‘திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மீது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்யப் பரிந்துரைத்தது. அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டு, அந்த மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தடை போட்டிருக்கிறது.

அந்த நடவடிக்கையோடு சரி... அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இந்த விவகாரத்தில் இல்லை. `குற்றச்சாட்டுக்கு உள்ளான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவனின் குடும்பத்துக்குச் சொந்தமானது. கிட்னி திருட்டு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் ஆனந்தன், இன்றும்கூட பள்ளிபாளையத்தில் சுதந்திரமாகச் சுற்றிவருகிறார். அவரைக்கூட யாரும் நெருங்கவில்லை...”

இது தொடர்பாக போடப்பட்ட பொதுநலவழக்கில்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே கண்டித்தும் இருக்கிறது. மேலும் கிட்னி திருட்டு குறித்து விசாரிப்பதற்காக, சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டது. குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. அதுதான் இந்த விவகாரத்தில், அரசியல் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

சிறுநீரகத் திருட்டு நிகழ்வுகள் நடந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்குச் சொந்தமானது , சிறுநீரகத் திருட்டில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரகரும் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் சிக்கிக்கொண்டால் சிறுநீரகத் திருட்டின் பின்னணியில் புதைந்துகிடக்கும் மர்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான், இந்த விசாரணையைத் தடுக்க தி.மு.க அரசு முயல்கிறது. தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா...  என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் இது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் வழக்குகள் பதியப்பட உள்ளது. இதனால் கண்டிப்பாக சி.பி.ஐ விசாரணை உள்ளே வரும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கிறது.